இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட விமானம் தாங்கி போர்க்கப்பலான ஐ.என்.எஸ். விக்ராந்த் தனது இரண்டாவது கடல் பயணத்தை தொடங்கியுள்ளது.
262 மீட்டர் நீளமும், 62 மீட்டர் அகலமும் உள்ள மிகப்பெரிய விமானம் தாங்கி போர்க்கப்பல் மிக்-29கே உள்ளிட்ட போர் விமானங்களை கையாளும் திறன் கொண்டது ஐ.என்.எஸ். விக்ராந்த். கடந்த 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், தனது முதலாவது பயணத்தை மேற்கொண்ட நிலையில், குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு அண்மையில் பார்வையிட்டிருந்தார்.
இந்த நிலையில், விக்ராந்த் கப்பல் தனது இரண்டாவது பயணத்தை தொடங்கியது. பல்வேறு சோதனைகளுக்குப் பின் விரைவில் கப்பல் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படும் எனத் தெரிகிறது.
இதையும் படிக்க: புனே கலைக்கூடம்: நிர்வாண புகைப்படங்கள் இடம்பெற்றதால் நிறுத்தப்பட்ட கண்காட்சி