அலாஸ்கா: அமெரிக்க இந்திய ராணுவம் 17-வது முறையாக இணைந்து பயிற்சியில் ஈடுபடும் நிகழ்ச்சி அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் கோலாகலமாக தொடங்கியுள்ளது. இந்த கூட்டுப் பயிற்சிக்கு 'எக்ஸ் யூத் அபியாஸ் 21' என்று பெயரிடப்பட்டுள்ளது.
அமெரிக்கா, இந்தியா ஆகிய நாடுகள் தங்களது ராணுவ பாதுகாப்பை பலப்படுத்த ஆண்டுதோறும் 14 நாட்கள் கூட்டு பயிற்சியில் ஈடுபடுகின்றன. இந்த கூட்டுப் பயிற்சியின்போது இரு நாட்டு ராணுவ வீரர்களும் இணைந்து அவசரகால செயல்பாடுகள், தாக்குதல்களை சமாளிக்க கருத்துகள் மற்றும் அறிவை அறிவுசார் உடைமைகளைப் பகிர்வது வழக்கம்.
மேலும் பயங்கரவாதத்திற்கு எதிராக இருநாடுகளும் தங்களை தற்காத்துக் கொள்வது எப்படி என்று இந்த கூட்டுப் பயிற்சியின் போது ராணுவ வீரர்களுக்கு மூத்த அதிகாரிகள் பயிற்சி அளிப்பர்.
இந்த கூட்டுப் பயிற்சியில் 300 அமெரிக்க இராணுவ வீரர்களும் ஏழாவது மெட்ராஸ் பட்டாலியன் குழுவைச் சேர்ந்த 350 இந்திய ராணுவ வீரர்களும் கலந்துகொண்டனர். இந்த கூட்டுப் பயிற்சியின் துவக்க விழாவில் இரு நாட்டு தேசிய கொடிகள் ஏற்றப்பட்டு தேசிய கீதங்கள் இசைக்கப்பட்டன.
விழாவில் பேசிய அமெரிக்க ராணுவ கமாண்டர் பிரயான் அமெரிக்கா, இந்தியா ஆகிய இரு நாடுகளின் படைகளும் தங்களது எண்ணங்கள், புதுமையான ராணுவ உத்திகள் ஆகியவற்றை பகிர்ந்து கொள்ள வலியுறுத்தினார். இதன்மூலமாக இரு நாட்டு ராணுவமும் பல புதிய ராணுவ நுணுக்கங்களை கற்றறிய முடியும் என்று அவர் தெரிவித்தார்.
கடினமான காலநிலைகளில் ராணுவ வீரர்கள் போர்சூழலை எவ்வாறு சமாளிக்க வேண்டும், குளிர் பிரதேசங்களில் பாதுகாப்பு பணியில் இருக்கும் வீரர்கள் எவ்வாறு செயல்படவேண்டும் என்று இருநாட்டு வீரர்களும் இந்த 14 நாள் பயிற்சியில் கற்றறிவர்.
Advertisement
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
×
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.