உலகம்
Published : 08,Oct 2021 02:53 PM
இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு இரண்டு பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
நார்வே தலைநகர் ஆஸ்லோவில் இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. மரியா ரெசா, டிமிட்ரி முராட்டோ ஆகியோருக்கு அமைதிக்கான நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருவரும் அமைதி, ஜனநாயகத்துக்கான அடிப்படையாக கருத்து சுதந்திரம் இருப்பதை வலியுறுத்தியதற்காக அவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. மரிய ரெசா அமெரிக்க பத்திரிகையாளராகவும், டிமிட்ரி முராட்டோ ரஷ்ய பத்திரிகையாளராகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
GO TO TOP
© Copyright Puthiyathalaimurai 2021. All rights reserved