உலகம்
Published : 08,Jan 2022 07:32 AM
ஹாலிவுட் சினிமாவின் உலக பிரபலமான நடிகரான சிட்னி போய்ட்டியர் காலமானார். அவருக்கு வயது 94. கருப்பினத்தை சார்ந்த இவர் 1950 முதல் 1960-கள் வரையிலான காலக்கட்டத்தில் சிறப்பான கதாபாத்திரங்களில் நடித்து மக்களின் மனதை வென்றவர். அமெரிக்கா மற்றும் பஹாமாஸ் என இரண்டு நாட்டு குடியுரிமையை பெற்றவர்.
1958-இல் ஆஸ்கர் விருதை வெல்வதற்காகன் ரேஸில் ‘தி டிஃபையன்ட் ஒன்ஸ்’ திரைப்படத்திற்காக சிட்னி போய்ட்டியரின் பெயர் பரிந்துரைக்கப்பட்டது. ஆறு ஆண்டுகளுக்கு பிறகு ‘லில்லிஸ் ஆஃப் தி ஃபீல்ட்’ படத்தில் நடித்தமைக்காக ஆஸ்கர் விருதை வென்றார். அதன் மூலம் ஆஸ்கர் வென்ற முதல் கருப்பின நடிகர் என்ற பெருமையை அவர் பெற்றார்.
அவருக்கு கடந்த 2009-இல் அப்போதைய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, ‘US Presidential Medal of Freedom’ விருதை கொடுத்து கவுரவித்திருந்தார். அமெரிக்க நாட்டின் உயரிய விருதுகளில் இதுவும் ஒன்று. கலிபோர்னியாவில் உள்ள தனது இல்லத்தில் அவரது உயிர் பிரிந்துள்ளது.
GO TO TOP
© Copyright Puthiyathalaimurai 2022. All rights reserved