பெங்களூரு:சிந்தகி, ஹனகல் இடைத்தேர்தலை, தீவிரமாக கருதியுள்ள ம.ஜ.த., தேர்தல் பிரசாரத்துக்காக, 20 ஸ்டார் பிரசாரகர்களை நியமித்துள்ளது.
ம.ஜ.த., தேசிய தலைவர் தேவகவுடா, ஏற்கனவே சிந்தகி தொகுதியில், கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரத்தை துவங்கியுள்ளார். முன்னாள் முதல்வர் குமாரசாமி, வரும் 16ல், பிரசாரத்தை துவங்க திட்டமிட்டுள்ளார். இரண்டு தொகுதிகளிலும் பிரசாரம் செய்வார். மாநில ம.ஜ.த., தலைவர் எச்.கே.குமாரசாமியும், வரும் 16ல், பிரசாரத்தில் பங்கேற்பார்.
மாநில, தேசிய தலைவர்களுடன் சேர்ந்து பிரசாரம், பொதுக்கூட்டம், ஊர்வலத்தில் பங்கேற்று வேட்பாளர்களுக்கு ஆதரவாக ஓட்டு கேட்பர். இதற்கிடையில் பிரசாரத்துக்காக ம.ஜ.த., தேசிய முதன்மை செயலர் முகமது ஜபுல்லா கான், முன்னாள் அமைச்சர்கள் ரேவண்ணா, பன்டப்பா காஷம்பூர், வெங்கடராவ் நாடகவுடா, எம்.பி., பிரஜ்வல், மாநில இளைஞரணி தலைவர் நிகில், எம்.எல்.ஏ.,க்கள் அன்னதானி, தேவானந்த் உட்பட, 20 பேர் கொண்ட ஸ்டார் பிரசாரகர்களை நியமித்துள்ளது. இவர்கள் தசரா முடிந்த பின், தொகுதிகளில் முகாமிட்டு, பிரசாரம் செய்வர்.
Advertisement