இத்தாலியில் இருந்து வந்த 173 பயணிகளுக்கு கோவிட்: ஆய்வகம் மீது விசாரணைக்கு உத்தரவு

2 years ago 849

அம்ரித்சர்: இத்தாலியிலிருந்து பஞ்சாப் மாநிலம் அம்ரித்சர் வந்த 173 விமான பயணிகளுக்கு கோவிட் தொற்று இருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவித்தன. பயணிகள் பலரும் அதனை தவறான முடிவு என குற்றம்சாட்டியதால் ஆய்வகம் மீது விமான நிலைய ஆணையம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

latest tamil news

அமிர்த்சர் ஸ்ரீ குருராம் தாஸ் சர்வதேச விமான நிலையத்திற்கு கடந்த வெள்ளியன்று இத்தாலியின் ரோம் நகரிலிருந்து பயணிகள் வந்தனர். அவர்கள் பயணத்திற்கு முன்பு கோவிட் பரிசோதனை செய்து நெகடிவ் என சான்று வைத்திருந்தனர். அம்ரித்சர் வந்திறங்கியது விமான நிலைய ஆணையம் பரிசோதனை நடத்தியது. அதனை டில்லியிலுள்ள ஆய்வகம் மூலம் மேற்கொண்டுள்ளனர். அதில் 173 பேருக்கு கோவிட் தொற்று இருப்பதாக முடிவுகள் வந்தது. இதனால் பயணிகள் விமான நிலையத்தில் பிரச்னையில் ஈடுபட்டனர். மறுபரிசோதனை செய்ததில் பலருக்கு கோவிட் இல்லை என முடிவு வந்தது.

latest tamil news

இதே போன்று வியாழனன்றும் இத்தாலியிலின் மிலன் நகரிலிருந்து அம்ரித்சர் வந்த 125 விமான பயணிகளுக்கு கோவிட் இருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவித்தன. குளறுபடியான முடிவுகளால் விமான நிலைய ஆணையம் டில்லி ஆய்வகத்துக்கு வழங்கிய பணிகளை நிறுத்தியது. உள்ளூர் ஆய்வகத்திடம் பரிசோதனை பணிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. ஆய்வகம் மீதான குற்றச்சாட்டை விசாரிக்க இந்திய விமான நிலைய ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement

வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை

Samathuvan அது அன்னைக்கு அது நடந்த கோவத்துல சொல்லிட்டாங்க. மன்னிசுருங்க.

Cancel

அப்புசாமி இத்தாலில டெஸ்ட் பண்ணிக்கிட்டு நெகட்டிவ் வந்தாத் தானே இந்தியாவுக்கு பயணம் செய்ய அனுமதிப்பாங்க?

Cancel

பேசும் தமிழன் இத்தாலியில் இருந்து அத்தனை பேரும் ஒரே விமானத்தில் வந்தது எப்படி??? பஞ்சாப்பில் நடப்பது... இத்தாலி கான் கிராஸ் ஆட்சி.... அங்கு இருக்கும் போலீஸ்...எஜமான் பேச்சை கேட்டு நாட்டின் பிரதமருக்கு கூட பாதுகாப்பு கொடுக்காத போலீஸ்... அங்கு போய் இறங்கினால்.... சோதனை செய்யாமல் வெளியே செல்ல ஏற்பாடு செய்யப்படும் என்ற உத்தரவாதத்தின் பேரில் இத்தாலியில் இருந்து வந்து இருக்கலாம்

Cancel

மேலும் 3 கருத்துக்கள்...

×

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.

4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

Read Entire Article