இந்திய - சீன ராணுவம் மீண்டும் பேச்சு எல்லை பிரச்னைக்கு தீர்வு கிடைக்குமா?

2 years ago 788

புதுடில்லி-இந்திய - சீன ராணுவம் இடையே மீண்டும் பேச்சு நடக்க உள்ளதால், எல்லையில் 20 மாதங்களுக்கு மேலாக நீடித்து வரும் பிரச்னைக்கு தீர்வு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

latest tamil news

சுமுக தீர்வுகிழக்கு லடாக்கின் சில பகுதிகளில் 2020 மே மாதத்தில் சீன படைகள் அத்துமீறின. இதை நம் படைகள் முறியடித்தன. இதையடுத்து இரு நாட்டு படைகளும் எல்லையில் குவிக்கப்பட்டுள்ளன. பல சுற்று பேச்சுக்குப் பின், சில இடங்களில் இருந்து படைகள் விலக்கி கொள்ளப்பட்டுள்ளன.

அதே நேரத்தில் மேலும் சில இடங்களில் இரு நாட்டு படைகளும் தொடர்ந்து நிறுத்தப்பட்டுள்ளன.இந்நிலையில் இரு நாட்டு ராணுவப் படை பிரிவு தளபதிகள் இடையேயான 14வது சுற்று பேச்சை நாளை மறுதினம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

latest tamil news

இது குறித்து நம் ராணுவ உயரதிகாரிகள் கூறியுள்ளதாவது:கடந்த சுற்று பேச்சின்போது பிரச்னைகளுக்கு சுமுக தீர்வு காண சில ஆலோசனைகள் வழங்கினோம். அவற்றை ஏற்க சீனா மறுத்து விட்டது. நம் விருப்பம்எல்லையில் இரு நாடுகளும் உள்கட்டமைப்பு வசதிகளை தீவிரப்படுத்தி வருகின்றன.

இந்நிலையில் 14வது சுற்று பேச்சில் பெரிய அளவு முன்னேற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவாகவே உள்ளது.இருப்பினும் எது வேண்டுமானாலும் நடக்கலாம். பிரச்னைக்கு சுமுக தீர்வு ஏற்பட வேண்டும் என்பதே நம் விருப்பம். அதனடிப்படையிலேயே பேச்சு இருக்கும். இந்த விவகாரத்தில் மூன்றாம் நாட்டின் தலையீட்டுக்கு நிச்சயம் அனுமதிக்க மாட்டோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement

வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை

Mani . V பேச்சு பேச்சா இருக்கணும். தேர்தல் முடியும் வரையிலும் அருணாசலப் பிரதேசம் தாண்டி வரக் கூடாது. அதுக்குப் பின்னாடி வரலாம்.

Cancel

Kasimani Baskaran ஒவ்வொரு எதிரியாகத்தான் அழிக்க வேண்டும். பாக்கிஸ்த்தான் வசமிருக்கும் காஷ்மீரை மீட்க வேண்டும். அதைச்செய்தால் சீனா அமைதியாக இருக்கும்.

Cancel

×

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.

4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

Read Entire Article