இரவில் நடந்த சித்து -ராகுல் சந்திப்பு : இன்று (அக்.16) கூடுகிறது காங்., காரிய கமிட்டி

3 years ago 726

புதுடில்லி: காங்கிரஸ் தலைவர் தேர்ந்தெடுப்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதிக்க காரிய கமிட்டி கூட்டம் புதுடில்லியில் இன்று (அக்.16) நடந்து வருகிறது. டில்லியில் காங்கிரஸ் கட்சி தலைமையகத்தில் நடக்கும் கூட்டத்திற்கு சோனியா தலைமை வகித்தார். கூட்டத்தில் லோக்சபா எம்.பி., ராகுல், பிரியங்கா, அம்பிகாசோனி, மல்லிகார்ஜூன கார்கே, ப.சிதம்பரம், பூபேஸ் பாகேல் உள்ளிட்ட மூத்த காங்., நிர்வாகிகள் பங்கேற்றனர்.

latest tamil news

கூட்டத்தில், கட்சியின் தலைவரை தேர்ந்தெடுப்பது குறித்தும், அடுத்தாண்டு நடைபெற உள்ள மூன்று மாநில தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது, உ.பி.,யில் தற்போதைய சூழ்நிலை குறித்தும், உட்கட்சி விவகாரம் பற்றி விரிவாக ஆலோசனை நடத்தப்படுகிறது.
தற்போதைய அரசியல் சூழ்நிலைகள் மற்றும் எதிர்காலத்தில் கட்சியை எவ்வாறு பலப்படுத்துவது என்பது குறித்து ஆலோசித்து மூத்த நிர்வாகிகள் கூறும் கருத்துக்களை ஆராய்ந்து சூழ்நிலைக்கேற்ப பயன்படுத்தி வருகின்ற தேர்தலை எதிர்கொள்வது என்பது பற்றி முடிவெடுக்க உள்ளதால் காங்., காரிய கமிட்டியில் உறுப்பினர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக நேற்று ராஜினாமாவை வாபஸ் பெற்ற சித்து, இரவில் காங்., எம்.பி., ராகுலை அவரது இல்லம் சென்று சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Read Entire Article