உலகம்,வீடியோ ஸ்டோரி
Published : 11,Oct 2021 09:31 PM
இலங்கையில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 90 சதவிகிதம் வரை அதிகரித்து, 2,657 ரூபாய்க்கு விற்கப்படுவதால் மக்கள் மிகுந்த அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
இலங்கையில் கடந்த வெள்ளிக்கிழமை வரை வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ஆயிரத்து 400 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இந்நிலையில், விலை அதிகரித்து 2,657 ரூபாய்க்கு எரிவாயு சிலிண்டர் விற்பனையாகிறது. அதேபோல ஒரு லிட்டர் பால் 250 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கோதுமை மாவு, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையும் விண்ணை முட்டும் அளவுக்கு அதிகரித்துள்ளது. எனினும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை கடுமையாக உயர்ந்திருப்பதால் சமூக வலைதளங்களில் பலர் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். உடனடியாக விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
இலங்கையில் கொரோனா தொற்று வேகமாக பரவிய நிலையில், அந்நிய செலாவணியை குறைக்க, இறக்குமதி கட்டுப்பாட்டுகளை விதித்தது. இதனால் இலங்கையில் பால் பவுடர் முதல் பல்வேறு அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது.
Related Tags : இலங்கை, விலைவாசி, உயர்வு, எரிவாயு சிலிண்டர், அதிருப்தியில் மக்கள், பால், கோதுமை மாவு, Sri Lanka, Price, Rise, Gas Cylinder, Dissatisfied People, Milk, Wheat Flour,
GO TO TOP
© Copyright Puthiyathalaimurai 2021. All rights reserved