பெங்களூரு:பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்வதால், எம்.எல்.ஏ.,க்களின் கார்கள் பயன்பாட்டில் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் எரிபொருள் விலை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. இதுவரை பெட்ரோல் விலை மட்டுமே, லிட்டருக்கு 100 ரூபாயை தாண்டியது. தற்போது டீசலின் விலையும் கூட, 100 ரூபாயை தொட்டுள்ளது.பெட்ரோல், டீசல் விலை பொது மக்களுக்கு மட்டுமின்றி அரசுக்கும் கவலையளித்துள்ளது. எரிபொருள் பயன்பாட்டை குறைப்பதில், அரசு கவனம் செலுத்தியுள்ளது.
எம்.எல்.ஏ.,க்களின் இன்னோவா கார்களை, அவரது அந்தரங்க உதவியாளர்கள், நெருக்கமானவர்கள் பயன்படுத்துவது, அரசின் கவனத்துக்கு வந்துள்ளது. இதற்கு கடிவாளம் போட நிதித்துறை திட்டமிட்டுள்ளது. எம்.எல்.ஏ.,க்கள் இனி ஒவ்வொரு முறை, கார்களை பயன்படுத்தும் போது, டிரிப் ஷீட்டுகளில் கையெழுத்திடுவதை கட்டாயமாக்கியுள்ளது.
டிரிப் ஷீட்டில் எம்.எல்.ஏ.,க்களே கையெழுத்திடுவதால், இவர்களின் கார்களை ஆதரவாளர்களோ, அந்தரங்க உதவியாளர்களோ பயன்படுத்த முடியாது. எரிபொருளும் மிச்சமாகும் என்பது, அரசின் எண்ணமாகும்.
Advertisement