பெங்களூரு : ''சூழ்நிலையில் மாற்றம் ஏற்படும் போது, காய்ச்சல், சளி, இருமல் ஏற்படுவது சகஜம். அதேபோன்று தொற்றும் பரவும். அதற்காக கொரோனா என கூற முடியாது. டெல்டா போன்று ஒமைக்ரான் அபாயமானதல்ல,'' என, மருத்துவ வல்லுனர் ராஜு கருத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, அவர் வெளியிட்ட வீடியோவில் கூறியதாவது:கொரோனா மூன்றாவது அலையில் நோயாளிகள் யாரிடமும், அபாயமான அறிகுறிகள், நுரையீரல் பாதிப்போ தென்படவில்லை. சாதாரண சளி, இருமல், காய்ச்சல், சோர்வு போன்ற பிரச்னைகள் ஏற்பட்டுள்ளதே தவிர, மருத்துவமனையில் சேரும் அளவுக்கு கடுமையான பிரச்னைகள் ஏற்படவில்லை.'ஒமைக்ரான்' என்பது குணப்படுத்த முடியாத தொற்று அல்ல. அது தானாகவே குணமாக கூடியதுதான். பருவ காலம் மாறும் போது காய்ச்சல், சளி, இருமல் போன்ற பிரச்னைகள் இருப்பது சகஜம்.
இதனால் மக்கள் பயந்து, கொரோனா பரிசோதனை செய்ய வேண்டிய அவசியமில்லை. வீட்டிலேயே அதிகம் ஓய்வெடுங்கள்.காய்ச்சல், இருமல் என்றால் பரிசோதனை செய்து கொண்டு மருத்துவமனையில் சேருவோர் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இதனால் தொற்று அதிகரித்ததாக அரசு கட்டாயத்தின் படி ஊரடங்கு அறிவிக்கும்.எனவே சாதாரண அறிகுறிகள் இருந்தால், டாக்டரின் ஆலோசனைப்படி மருந்துகள் உட்கொண்டு, ஓய்வு பெறுங்கள்.ஏற்கனவே ஊரடங்கால் ஏற்பட்ட தொந்தரவுகள், பொருளாதார பிரச்னைகளை பார்த்துள்ளோம். ஊரடங்கால் மக்கள், தொற்றை விட அதிகமாக பாதிக்கப்பட்டனர்.இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement