கடலுார் : புரட்டாசி கடைசி சனிக்கிழமையொட்டி, கடலுார் பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையான நேற்று கடலுாரில் உள்ள பெருமாள் கோவில்களில் சிறப்பு திருமஞ்சனம் மறறும் வழிபாடு நடந்தது.
108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் ஸ்ரீதேவி, பூமிதேவி சமேத தேவநாத சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். திருப்பாதிரிபுலியூர் வரதராஜபெருமாள் கோவிலில் ஸ்ரீதேவி, பூமிதேவி, ஆண்டாள் சமேத வரதராஜ பெருமாள், புதுப்பாளையம் ராஜகோபல சுவாமி, தாயாருடன் சிறப்பு அலங்காரத்திலும், மஞ்சக்குப்பம் ஆட்கொண்ட வரதராஜ பெருமாள் பெருந்தேவி தாயாருடன் சிறப்பு அலங்காரத்திலும் எழுந்தருளினர். சிறப்பு திருமஞ்சனம் மற்றும் வழிபாடுகள் நடந்தன.பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை வரதராஜ பெருமாள் கோவிலில் நேற்று புரட்டாசி ஐந்தாவது சனிக்கிழமையை முன்னிட்டு, வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தது. மூலவர் திருப்பதி சீனிவாச பெருமாள், அலங்காரத்திலும், உற்சவமூர்த்தி, சுப்ரபாத சேவை, கோமாலா சேவை, அர்ச்சனா சேவை, சாற்றுமுறை சேவை உள்ளிட்ட சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பூஜைகளை, சீனிவாச பட்டாச்சாரியார் செய்திருந்தார்.நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் அடுத்த மேல்பட்டாம்பாக்கத்தில் உள்ள அலர்மேலுமங்கை தாயார் சமேத வேட்ட வெங்கட்ராய பெருமாள் கோவிலில் புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. மூலவர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் பெருமாள் உற்சவர் கோவிலை வலம் வந்து அருள்பாலித்தார். நெல்லிக்குப்பம் பாமா ருக்குமணி சமேத வேணுகோபால சுவாமி கோவில், பூலோகநாதர் கோவிலில் உள்ள பிரசன்ன வெங்கடாஜலபதி கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது.திட்டக்குடி: திட்டக்குடி வதிஷ்டபுரம் அரங்கநாதபெருமாள் கோவிலில் புரட்டாசி கடைசி சனிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. ஸ்ரீதேவி பூதேவி சமேத அரங்கநாதர் பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். வைணவ செம்மல் வரத சிங்காச்சாரியார், கோவில் பட்டாச்சாரியார் ராகவன் சிறப்பு வழிபாட்டை நடத்தினர்.பக்தர்களுக்கு அனுமதிகொரோனா தடுப்பு நடவடிக்கையாக வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கவில்லை.
இதனால், கடந்த நான்கு புரட்டாசி சனிக்கிழமைகளில், பெருமாள் கோவில்களுக்கு செல்ல முடியாமல் பக்தர்கள் தவித்தனர். நோய் தொற்று குறையத் துவங்கியதால் வெள்ளி சனி, மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கோவில்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு அரசு உத்தரவிட்டது. புரட்டாசி கடைசி சனிக்கிழமையான நேற்று திருவந்திபுரம் உள்ளிட்ட பெருமாள் கோவில்களில் பக்தர்கள் தரிசனம் செய்தனர். அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடித்து பக்தர்கள் தரிசனம் செய்ய அறிவுறுத்தப்பட்டனர்.
Advertisement