புதுடில்லி : மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் கைதாகி ஜாமினில் வெளியே உள்ள பா.ஜ., - எம்.பி., பிரக்யா தாக்குர் கபடி விளையாடியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
மஹாராஷ்டிராவின் மாலேகான் என்ற இடத்தில், 2008ல் இரு சக்கர வாகனத்தில் பொருத்தப்பட்டு இருந்த குண்டு வெடித்ததில் ஆறு பேர் பலியாயினர். 100க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
'வீடியோ'
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பா.ஜ., பெண் பிரமுகர் பிரக்யா தாக்குர், 51, ஒன்பது ஆண்டுகள் சிறையில் இருந்தார். உடல் நலக்குறைவை காரணம் காட்டி 2017ல் ஜாமின் வழங்கப்பட்டது. வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்தும் விலக்கு அளிக்கப்பட்டது. மத்திய பிரதேசத்தின் போபால் தொகுதியில் பா.ஜ., சார்பில் போட்டியிட்டு லோக்சபா எம்.பி.,யாக தேர்வானார்.
உடல் நலக்குறைவினால் ஜாமின் பெற்ற பிரக்யா, போபால் மைதானத்தில் கூடைப்பந்து விளையாடும், 'வீடியோ' வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. அதன்பின் திருமணம் ஒன்றில் நடனமாடிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. சமீபத்தில் நவராத்திரி விழாவுக்குச் சென்ற பிரக்யா, குஜராத்தின் பாரம்பரிய நடனமான கர்பா நடனமாடினார்.
நேற்று முன்தினம் போபாலில் உள்ள காளி கோவிலுக்கு சென்றார். அருகே உள்ள மைதானத்தில் பெண்கள் கபடி விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்களுடன் சேர்ந்து பிரக்யாவும் உற்சாகமாக கபடி விளையாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
விசாரணை
'உடல் நலன் சரியில்லை என பொய் சொல்லி விசாரணைக்கு கூட ஆஜராகாத பெண் எம்.பி., பொது இடங்களில் இப்படி துள்ளி குதித்து விளையாடுவது பா.ஜ., தலைமையின் கண்களுக்கு தெரியவில்லை' என, காங்., தலைவர்கள் குற்றம்சாட்டினர்.
Advertisement
வாசகர் கருத்து (8)
- புதியவை
- பழையவை
- அதிகம் விவாதிக்கப்பட்டவை
- மிக மிக தரமானவை
- மிக தரமானவை
- தரமானவை
மேலும் 5 கருத்துக்கள்...
×
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.