காஷ்மீர்: பாதுகாப்புப் படையினருடனான மோதலில் பயங்கரவாதிகள் இருவர் சுட்டுக் கொலை

2 years ago 1117

Two-unidentified-militants-were-killed-in-Jammu-and-Kashmir

ஜம்மு - காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பயங்கரவாதிகள் 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

குல்காம் மாவட்டம் ஹசன்போரா என்ற கிராமத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த தகவலின்பேரில், பாதுகாப்புப் படையினர் அங்கு தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கியால் சுடத் தொடங்கினர். பாதுகாப்புப் படையினரும் பதிலுக்கு துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இதில் பயங்கரவாதிகள் 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்கள் பதுங்கியிருந்த இடத்தில் வெடிபொருள்களும் ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன. கொல்லப்பட்டவர்கள் எந்த பயங்கரவாதக் குழுவைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணும் பணிகள் நடந்து வருவதாக அதிகாரிகள் கூறினர்.

இதையும் படிக்க: புனே கலைக்கூடம்: நிர்வாண புகைப்படங்கள் இடம்பெற்றதால் நிறுத்தப்பட்ட கண்காட்சி 

Read Entire Article