குட்டைகளை சீரமைப்பதால் மகிழ்ச்சி! நிலத்தடி நீர் மட்டம் உயரும்

3 years ago 691

சூலுார்:கிராமங்களில் உள்ள, குட்டைகளை சீரமைத்து, மரக்கன்றுகள் நடும் பணிகளால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.முந்தைய 2006---2011 தி.மு.க., ஆட்சியில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், குட்டைகள் துார் வாரப்பட்டு, கரைகளை சுற்றி தடுப்பு சுவர்கள் கட்டப்பட்டன. அக்குட்டைகளில், 'பேபி பாண்ட்' எனப்படும், நீர் தேக்க அமைப்புகள் உருவாக்கப்பட்டன.இவை போதிய அளவு பராமரிக்கப்படாததால், துார்ந்து குப்பை கொட்டுமிடமானது.தற்போது, குட்டைகளை சீரமைத்து, கரைகளில் மரக்கன்றுகள் நட, அரசு உத்தரவிட்டுள்ளது.
சூலூர் வட்டாரத்தில், அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் பணிகள் மேற்கொள்ளப்பட்ட குட்டைகளில் சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. அரசூர், முதலிபாளையம், மயிலம்பட்டி, காடாம்பாடி உள்ளிட்ட கிராமங்களில், உள்ள குட்டைகளில் உள்ள குப்பை மற்றும் புதர்கள் அகற்றப்பட்டு, தடுப்பு சுவர்களுக்கு வெள்ளை அடிக்கப்பட்டு, கரைகளில் மரக்கன்றுகள் நடும் பணி நடக்கிறது.அரசூர் ஊராட்சி பொத்தியாம்பாளையத்தில் நடந்த பணிகளை ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதா ஆய்வு செய்தார்.வட்டார வளர்ச்சி அலுவலர், ஒன்றிய பொறியாளர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.குளங்கள் துார்வாரப்படுவதால், மழைக்காலத்தில் நீர் தேக்கப்பட்டு, நிலத்தடி நீர்மட்டம் உயர வாய்ப்புள்ளதால், மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Advertisement

Read Entire Article