பெங்களூரு-கோவா மாநிலத்துக்கு சட்டசபை பொதுத்தேர்தல் நடக்கவுள்ளது. மாநிலத்தின் ஆட்சியை கைப்பற்ற, காங்., மேலிடம் முயற்சிக்கிறது.கர்நாடக காங்., தலைவர் சிவகுமாரை, தேர்தல் பொறுப்பாளராக நியமிக்க, கட்சி மேலிடம் திட்டமிட்டது. இதற்காக தயாராகும்படி மேலிடம் உத்தரவிட்டது.ஆனால் இப்பொறுப்பை ஏற்க மறுத்த அவர், தனக்கு பொறுப்பு வேண்டாம். வேறு யாரையாவது நியமிக்கும்படி கூறிவிட்டதாக தெரிகிறது.'தேர்தல் பொறுப்பை ஏற்றுக்கொண்டு, நான் கோவா சென்றால், கர்நாடகாவில் கட்சியை பலப்படுத்தும் பணியில், பின்னடைவு ஏற்படும். இடைத்தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட வேண்டும். கட்சி நிர்வாகிகள் நியமனம், டிசம்பரில் மாநில சுற்றுப்பயணம் உட்பட பல நெருக்கடிகள் எனக்குள்ளது.'இச்சூழ்நிலையில், என்னால் கோவா தேர்தல் பொறுப்பை ஏற்க முடியாது. இப்பொறுப்பை மற்றவருக்கு தாருங்கள்' என, கூறியதாக தகவல் வெளியாகிஉள்ளது.
Advertisement