இந்தியா
Published : 16,Oct 2021 08:54 AM
மகேந்திரசிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நான்காவது முறையாக ஐபிஎல் சாம்பியன் ஆனதற்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக நள்ளிரவில் ஆழ்கடலில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
துபாயில் நடைபெற்ற ஐ.பி.எல். இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கொல்கத்தாவை 27 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 4வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளது. இந்த வெற்றியை உலகம் முழுவதுமுள்ள கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட கிரிக்கெட ஆர்வலர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பாராட்டி வாழ்த்து தெரிவிக்கும் விதமாக புதுச்சேரியில் உள்ள ஆழ்கடல் பயிற்சியாளர் அரவிந்தன் தலைமையிலான குழுவினர் ஆழ்கடலின் மணலில் ஸ்டம்ப் அடித்து கிரிக்கெட் விளையாடி தங்களின் வாழ்த்துகளையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தியுள்ளனர். நள்ளிரவில் நடுக்கடலில் மின் ஒளியில் கிரிக்கெட் விளையாடியது கிரிக்கெட் ஆர்வலர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
Related Tags : புதுச்சேரி, சிஎஸ்கே அணி, வாழ்த்து, ஆழ்கடல், கிரிக்கெட், அரவிந்தன் குழுவினர், பாராட்டு, Puducherry, CSK Team, Greetings, Deep Sea, Cricket, Aravindan Team, Praise,
GO TO TOP
© Copyright Puthiyathalaimurai 2021. All rights reserved