பெங்களூரு:"சிவகுமார் உண்மையில், காங்கிரஸ் தலைவராக இருந்தால் அவருக்கு அதிகாரம் இருந்தால், அவரை 'கமிஷன் கிராக்கி' என கூறிய உக்ரப்பாவை, கட்சியிலிருந்து நீக்க வேண்டும்," என பா.ஜ., - எம்.எல்.சி., தேஜஸ்வினி கவுடா, சவால் விடுத்தார்.
பெங்களூரில் அவர் கூறியதாவது:முதல்வராக வேண்டுமென்ற பேராசையில், சிறு பிள்ளை போன்று பிடிவாதம் பிடித்து, மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை, சிவகுமார் பெற்றுக் கொண்டார். ஆனால் இப்போது சொந்த கட்சியினரே, அவரது முகமுடியை கழற்றினர். சிவகுமார் காங்கிரசுக்கு, சக்தியூட்டவில்லை. சாதாரண தொண்டரும் கூட, அவரை அசைக்கலாம். ஆனால் எங்களின் பா.ஜ., அற்புதமான கட்சி. மக்களுக்காக பா.ஜ.,. பா.ஜ.,வுக்காக மக்கள். சிவகுமார் தலைவராக இருந்தாலும் கூட, இவருக்கு எதிராக ஜமிர் பேசினார்.
இப்போது சிவகுமாரின் விசுவாசிகளே, இவரைப்பற்றி பேசியுள்ளனர். கட்சியில் ஒழுங்கு கமிட்டி இருப்பது ஏன்? சிவகுமார் தலைமையில், கட்சியை முன்னடத்த முடியாது. இவர் கனவிலும் கூட, பா.ஜ., அருகில் வரவே முடியாது.இவர் 'பில்டப்' கொடுப்பதை விட்டு விட்டு, தன்னை பற்றி பேசியவர்கள் மீது, நடவடுக்கை எடுக்க வேண்டும். இவருக்கு எங்கள் கட்சியை பற்றி பேச, அவருக்கு அருகதையில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement