புதுடில்லி : வேலை வாய்ப்புகள் சார்ந்த சமூக ஊடகமான 'லிங்க்ட்இன்' சேவையை, சீனாவில் நிறுத்தப் போவதாக, அதை நடத்தி வரும் 'மைக்ரோசாப்ட்' நிறுவனம் அறிவித்துள்ளது.
'தொழில்நுட்ப நிறுவனங்கள் மீதான கட்டுப்பாட்டை சீனா கடுமையாக்குவதால், இந்த முடிவுக்கு வந்திருப்பதாக மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது. சீனாவில் கடந்த 2014ம் ஆண்டில் மைக்ரோசாப்ட் நிறுவனம் லிங்க்ட்இன் சேவையை துவக்கியது. இந்நிலையில், அரசு அண்மைக் காலமாக பல்வேறு கட்டுப்பாடுகளை கொண்டுவருவதை அடுத்து, லிங்க்ட்இன் தன்னுடைய சேவையை நிறுத்திக் கொள்ளும் முடிவுக்கு வந்துள்ளது.
இது குறித்து, தொழில்நுட்ப பகுப்பாய்வு நிபுணர் ஒருவர் கூறியதாவது:சீன அரசு அதன் மீதான விமர்சனங்களை இலகுவாக எடுத்துக்கொள்ளாமல், மிகவும் சீரியஸாக எடுத்துக்கொண்டு விடுகிறது. அதனால், இத்தகைய தகவல் பரிமாற்றங்களை நிறுத்த கடுமையான முயற்சிகளில் இறங்கி விடுகிறது. இந்நிலையில், லிங்க்ட்இன் போன்ற தகவல் பரிமாற்ற தயாரிப்புகளை சீனாவில் வெளியிடுவது என்பது சிரமமானதாக உள்ளது.
இந்த தகவல் யுகத்தில் நீங்கள் எவ்வளவுக்கு எவ்வளவு தகவல்களை கட்டுப்படுத்த முனைகிறீர்களோ, அவ்வளவுக்கு மக்கள் அதை அடைய ஆக்கப்பூர்வமாக முயற்சிப்பார்கள் என்பதை சீன அரசு உணர வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார். 'பேஸ்புக்' மற்றும் 'டுவிட்டர்' ஆகியவை சீனாவில் தடை செய்யப்பட்டு, பத்து ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. 'கூகுள்' நிறுவனம் 2010ல் சீனாவை விட்டு வெளியேறிவிட்டது. இப்போது லிங்க்ட்இன்.
Advertisement
வாசகர் கருத்து (2)
- புதியவை
- பழையவை
- அதிகம் விவாதிக்கப்பட்டவை
- மிக மிக தரமானவை
- மிக தரமானவை
- தரமானவை
சீன அரசு சீன மொழியில் என்ன தகவலை பரிமாறச்சொல்லுகிறதோ அதுதான் அங்கு பரிமாற வேண்டும். வேறு தகவல்களை வெளியிட அதிகாரம் இல்லை. சில முறை நிருபர்கள் அரசை கேள்வி கேட்டாலே போதும் - அரசுக்கு எதிரானவன் என்று முத்திரைகுத்தி மரண தண்டனையை நிறைவேற்றி அவர்களின் எலும்புத்துண்டு கூட குடும்பத்தினருக்கு கிடைக்காத படி செய்து விடுவார்கள்.
Cancel
×
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.