புதுடில்லி : கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவது குறித்து பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஆய்வு செய்தார். மாவட்ட அளவில் மருத்துவ உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், தடுப்பூசி போடுவதை வேகப்படுத்தவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
விழிப்புணர்வு
கொரோனா வைரஸ் பரவல் மூன்றாவது அலை நாடு முழுதும் பெரும்தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து, பிரதமர் நரேந்திர மோடி நேற்று சுகாதார மற்றும் உள்துறை அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார்.
இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: கொரோனா வைரஸ் புதிய வகைகளில் உருமாறி வருவதால் பரிசோதனை, தடுப்பூசியிலும் மாற்றங்கள் செய்வது குறித்து ஆய்வுகள் செய்யப்பட வேண்டும். இது தொடர்பாக தொடர் ஆய்வுகள் நடத்த பிரதமர் வலியுறுத்தினார்.
முக கவசம் அணிவது, சமூக இடைவெளியைப் பின்பற்றுவது போன்றவை தற்போதைய புதிய இயல்பாக மாறியுள்ளன. இவையே, வைரஸ் பரவல் வேகத்தைதடுக்கும். மேலும், தடுப்பூசியும் முக்கிய கவசமாக செயல்படுகிறது. இது தொடர்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மாவட்ட அளவில் மருத்துவ உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். அனைவருக்கும் தடுப்பூசி போடப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
இது தொடர்பாக மாநில முதல்வர்களுடன், அந்தந்த மாநிலத்தில் உள்ள சூழ்நிலைக்கு ஏற்பஎடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்யப் போவதாக பிரதமர் கூறியுள்ளார்.
கொரோனா வைரஸ் பரவல் தடுப்பில் முக்கிய பங்காற்றும் முன்களப் பணியாளர்களுக்கு, 'முன்னெச்சரிக்கை டோஸ்' தடுப்பூசி வழங்குவதை ஒரு இயக்கமாக செயல்படுத்தவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஏழே நாட்களில்
நாடு முழுதும், 15 - 18 வயதுடைய சிறார்களில் 31 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார். இவ்வாறு அதில்கூறப்பட்டுள்ளது.
இன்று ஆலோசனை
இதற்கிடையே, வைரஸ் பரவல் குறித்து மத்திய பிரதேசம், கோவா, ராஜஸ்தான், குஜராத், மஹாராஷ்டிரா மாநிலங்களின் சுகாதார அமைச்சர்களுடன், மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.
Advertisement
வாசகர் கருத்து (2)
- புதியவை
- பழையவை
- அதிகம் விவாதிக்கப்பட்டவை
- மிக மிக தரமானவை
- மிக தரமானவை
- தரமானவை
×
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.