இந்தியா
Published : 15,Oct 2021 01:45 PM
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரமோற்சவத்தின் கடைசி நிகழ்வான சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி எளிமையாக நடைபெற்றது.
வழக்கமான கோவிலுக்கு வெளியேயுள்ள புஷ்கரணியில் பல லட்சம் பக்தர்கள் முன்னிலையில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறும். ஆனால், கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டைப் போல இந்த முறையும், கோவிலுக்கு உள்ளே தொட்டியில் தண்ணீர் நிரப்பி சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெற்றது. பல்லக்கு உற்சவமும் கோவிலுக்கு உள்ளேயே நடைபெற்றது. இன்றிரவு 7 மணியளவில் தங்கக் கொடி மரத்தில் இருந்து கருட கொடி இறக்கும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. அத்துடன், நடப்பாண்டுக்கான பிரம்மோற்சவம் திருப்பதியில் நிறைவடைகிறது.
GO TO TOP
© Copyright Puthiyathalaimurai 2021. All rights reserved