இந்தியா
Published : 15,Oct 2021 11:33 AM
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.
இரண்டு நாள் பயணமாக திருமலை திருப்பதிக்கு சென்ற நீதிபதி என்.வி.ரமணாவை, திருமலை திருப்பதி தேவஸ்தான தலைவர் சுப்பா ரெட்டி, செயல் அலுவலர் ஜவஹர் ரெட்டி ஆகியோர் வரவேற்றனர் இதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்ற நீதிபதி ஹிமா கோஹ்லி, ஆந்திர உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பிரஷாந்த் குமார் மிஸ்ரா ஆகியோருடன் சென்று, அவர் சாமி தரிசனம் செய்தார். முன்னதாக கீழ் திருப்பதியில் பத்மாவதி தாயார் கோயிலுக்கும் சென்று வழிபாடு நடத்தினார்.
GO TO TOP
© Copyright Puthiyathalaimurai 2021. All rights reserved