தென் மாவட்ட சிலம்பத்தில் தங்கம் வென்ற வீரர்கள்

3 years ago 742

மதுரை : மதுரையில் தீனதயாள் சேவை மையம், உலக கலை மற்றும் விளையாட்டு கூட்டமைப்பு சார்பாக தென் மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டிகள் நடந்தன.

இதில் மதுரை மாவட்ட வீரர், வீராங்கனைகள் வெற்றி பெற்றனர்.தனித்திறமை நெடுங்கம்பு 6 வயது பிரிவில் டி.வி.எஸ்., பள்ளி மாணவி ஸ்ரீ சாய் சஷ்டிதா தங்கப்பதக்கம், வெங்கடேஸ்வரா பள்ளி மாணவி பூர்ணவர்சி வெள்ளி பதக்கம் வென்றனர். ஏழு வயது பிரிவில் டி.வி.எஸ்., பள்ளி மாணவி தணன்யா தங்கம், மகரிஷி வித்யா மந்திர் பள்ளி மாணவி நவஸ்ரீ வெண்கலம் வென்றனர்.எட்டு வயது பிரிவில் விசாகன் பள்ளி மாணவி ஐஸ்வர்யா வெள்ளி, 9வயது பிரிவில் பிரசன்னா பள்ளி மாணவன் கபிலேஷ் வெண்கலம், 10 வயது பிரிவில் எஸ்.பி.ஓ.ஏ., பள்ளி மாணவன் சிவசூர்யா, சி.இ.ஓ.ஏ., பள்ளி மாணவி சிவபானு வெள்ளிப் பதக்கம் வென்றனர்.

11 வயது பிரிவில் பிரமோத் சாய் தங்கப்பதக்கம், ரூபி பள்ளி மாணவன் கீர்த்திகேஷ் வெண்கலம், மகரிஷி வித்யா மந்திர் பள்ளி மாணவி அபி வர்ஷினி வெள்ளி, எஸ்.பி.ஜே., பள்ளி மாணவி சிவாணி வெண்கலப்பதக்கம் வென்றனர்.12 வயது பிரிவில் செவன்த் டே பள்ளி மாணவன் சபரிவேலன் வெண்கலம், 13 வயது பிரிவில் செயின்ட் ஜான்ஸ் பள்ளி மாணவன் சர்வேஷ் வெள்ளி, 14 வயது பிரிவில் சீதாலட்சுமி பள்ளி மாணவி கவிப்பிரியா, 15 வயது பிரிவில் மதுமிதா தங்கப்பதக்கம், 16 வயது பிரிவில் தேவசகாயம் பள்ளி மாணவன் ராம்குமார் தங்கப்பதக்கம் வென்றனர். இவர்களை தி சாய் சிலம்பம் பள்ளி தலைவர் ராஜா, செயலாளர் சாய் சுதாகர் பாராட்டினர்.

Advertisement

Read Entire Article