பசியால் வாடும் மக்கள்; 101வது இடத்தில் இந்தியா

3 years ago 700

India, Falls, Hunger Index, Behind, Pakistan, Nepal, Report, பட்டினி, நாடுகள், இந்தியா, பாகிஸ்தான், நோபளம்

புதுடில்லி: உலக நாடுகளின் பசிப் பட்டியலில் 94வது இடத்தில் இருந்த இந்தியா ஒரே ஆண்டில் 101வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் உலகில் உள்ள 116 நாடுகளிலும் உலகில் பசியால் வாடுபவர்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஊட்டச்சத்து குறைபாடு, குழந்தைகள் மரணம் உள்ளிட்ட நான்கு அம்சங்களின்படி இந்த வருடத்திற்கான உலக பட்டினி ஆய்வறிக்கை தற்போது வெளியாகியுள்ளது.

அதன்படி, இந்த பட்டியலில் கடந்த ஆண்டு 94வது இடத்தில் இருந்த இந்தியா, தற்போது 101வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. நமது அண்டை நாடான நேபாள், வங்கதேசம் 76வது இடத்திலும், பாகிஸ்தான் 92வது இடத்திலும் உள்ளது. இந்தியாவிற்கு பின்னால் பப்புவா நியூகினியா (102), ஆப்கானிஸ்தான், நைஜீரியா (103), காங்கோ (105) ஆகிய சிறிய நாடுகள் மட்டுமே உள்ளன. கடைசி இடமான 116வது இடத்தில் சோமாலியா உள்ளது.

latest tamil news

அதேபோல், பட்டினி மிகவும் கொடூரமாக உள்ள 31 நாடுகளின் பட்டியலில் இந்தியா இடம் பெற்றுள்ளது.கொரோனா பரவலால் கடந்த ஒரே ஆண்டில் கோடிக்கணக்கான இந்தியர்கள் வறுமையின் பிடியில் சிக்கியிருப்பது இந்த ஆய்வறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. பட்டினியை ஒழித்த முதல் பத்து நாடுகளில் பிரேசில், சிலி, சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் உள்ளன.

Advertisement

வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை

duruvasar இப்போ இன்னும் கீழ வந்திருப்போம் . மே 7 க்கு மேல் 1,5 கோடி தமிழர்களின் 10 வருட பசி தீர்ந்துவிட்டது.. இப்பவே புளிப்பு ஏப்பம் நிலைக்கு போய்விட்டது.

Cancel

ஆரூர் ரங் ஒரு வேளை ஓட்ஸ், பீட்சா, பர்கர், கெல்லாக்ஸ் , ஷாவர்மா 😇சத்து பற்றாக்குறைய பட்டினின்னு சொல்லுறாங்கன்னு நெனைக்கிறேன் .

ரிஷிகேஷ் நம்பீசன் ஏம்ப்பா முட்டுக்கட்டை நீ சொன்ன விஷயம எல்லாம் ஏன் PAKISTHAN BANGALADESH எல்லாம் நமக்கு மேலே , இதற்க்கு மோடி வெட்கப்பட்டு வேதனைப்பட்டு விலகி இருக்கனும் , அள்ளும் திறமை அற்ற கூட்டம்...

Cancel

amuthan இருந்த அரசு பொது உடைமைகளை விற்று தின்னாச்சி. இனி கைதட்டி விட்டு விளக்கு பிடித்துவிட்டு தெருவில் நிற்க வேண்டியது தான்

Cancel

மேலும் 13 கருத்துக்கள்...

×

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.

4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

Read Entire Article