பாகிஸ்தான் நாட்டு உச்ச நீதிமன்றத்திற்கு முதன்முறையாக பெண் ஒருவர் நீதிபதியாக நியமிக்கப்பட உள்ளார்.
லாகூர் நீதிமன்றத்தின் நீதிபதி ஆய்ஷா மாலிக், உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்க பாகிஸ்தானின் சட்ட கமிஷன் ஒப்புதல் அளித்துள்ளது. பாகிஸ்தான் உருவானதிலிருந்து அந்த நாட்டு உச்சநீதிமன்றத்திற்கு பெண் ஒருவர் முதன்முறையாக நீதிபதியாக நியமிக்க ஒப்புதல் வழங்கப்பட்டிருக்கிறது.
ஆயிஷா மாலிக்கை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்க கடந்த ஆண்டே அவரது பெயர் பரிசீலிக்கப்பட்டது. ஆனால், உச்சநீதிமன்ற வழக்கறிஞர்களின் எதிர்ப்பு காரணமாக ஆயிஷா மாலிக்கின் பதவி உயர்வு நிராகரிக்கப்பட்டது. நாட்டில் உள்ள 5 உயர்நீதிமன்றங்களில் பணியாற்றும் நீதிபதிகளை காட்டிலும் ஆயிஷா மாலிக் இளையவர் என்றும், அவரை நியமித்தால் போராட்டம் நடத்தப்படும் என்றும் வழக்கறிஞர்கள் போர்க்கொடி உயர்த்தினர்.
இந்த முறையும் எதிர்ப்புகளை மீறி உச்சநீதிமன்ற நீதிபதி பதவிக்கு ஆயிஷா மாலிக் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். விரைவில் அவர் பாகிஸ்தானின் முதல் உச்சநீதிமன்ற பெண் தலைமை நீதிபதியாக பதவியேற்பார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிக்க: அமெரிக்கா: அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து - 7 குழந்தைகள் உள்பட 13 பேர் உயிரிழப்பு