நாக்பூர்: ‛‛ தலிபான்கள் மாறியிருக்கலாம். ஆனால், பாகிஸ்தான் மாறப்போவது கிடையாது'' என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார்.
மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள ஆர்எஸ்எஸ் தலைமையகத்தில், விஜயதசமியை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
பிரிவை அதிகப்படுத்தும் கலாசாரம் நமக்கு தேவையில்லை. ஆனால், நாட்டை ஒற்றுமைபடுத்தவும், அன்பை முன்னிலைப்படுத்தும் கலாசாரம் தான் நமக்கு முக்கியம். பிறந்த நாள் கொண்டாட்டங்கள் மற்றும் திருவிழாக்கள் போன்ற சிறப்பு பண்டிகைகளை அனைவரும் இணைந்து கொண்டாட வேண்டும்.
நாடு பிரிவினை செய்யப்பட்டது வரலாற்றில் சோகமான நாள். இழந்த பெருமையை மற்றும் ஒற்றுமையை மீட்கவும், வரலாற்றை புதிய தலைமுறையினர் அறிந்து கொள்ளவும், உண்மையான வரலாற்றை நாம் எதிர்கொள்ளவது அவசியம். இந்திய கலாசாரத்தை மதிக்க வேண்டும். தற்போதைய இந்திய கலாசாரம், மதம், வரலாற்றை சீர்குலைக்க முயற்சி நடக்கிறது.
தலிபான்கள் வரலாறு நமக்கு தெரியும். சீனா மற்றும் பாகிஸ்தான் ஆதரவு அளிக்கிறது.தலிபான்கள் கூட மாறியிருக்கலாம். ஆனால் பாகிஸ்தான் மாறவில்லை, அது மாறாது. இந்தியா குறித்த சீனாவின் நோக்கம் மாறி உள்ளதா? நமது எல்லை பாதுகாப்பு பலப்படுத்தப்பட வேண்டும்.
சுற்றுச்சூழலுக்கு உகந்த கொள்கையை உருவாக்குவதுடன். பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க வேண்டும். சமூக நல்லிணக்கத்திற்காக ஆர்எஸ்எஸ் பாடுபடுகிறது.கோவிட் 3வது அலையை எதிர்கொள்ள தொண்டர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது.
ஓடிடி தளங்களில் எதை காட்ட வேண்டும் என்பதற்கு எந்த கட்டுப்பாடுகளும் இல்லை. கோவிட் பரவலுக்கு பிறகு குழந்தைகளின் கைகளில் மொபைல்போன் பயன்பாடு அதிகரித்துள்ளது. போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்திருக்கிறது. இதனை தடுப்பது எப்படி? இதன் மூலம் கிடைக்கும் வருமானம் தேசவிரோத செயல்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. இதனை கட்டுப்படுத்துவது அவசியம்.
மக்கள் தொகை கொள்கையை மீண்டும் பரிசீலனை செய்து, அடுத்து 50 ஆண்டுகளுக்கு ஏற்றவாறு புதிய கொள்கை உருவாக்கி அமல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
Advertisement
வாசகர் கருத்து (7)
- புதியவை
- பழையவை
- அதிகம் விவாதிக்கப்பட்டவை
- மிக மிக தரமானவை
- மிக தரமானவை
- தரமானவை
ஒரு முறை அல்ல, பல முறை விநாயக் தாமோதர் சாவர்க்கர் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு கருணை மனு போட்டு பலமுறை நிராகரிக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு முறையும் காந்திதான் அவரை மீண்டும் மீண்டும் கருணை மனு போடும்படி அறிவுரை கூறினாரா என்பதை ராஜ் நாத் சிங் அவர்கள் தான் விளக்கவேண்டும் ஒருவேளை காந்தி தான் ஆங்கில அரசிடம் இருந்து பென்ஷன் வாங்க சொல்லியிருப்பாரோ. சுய புதி இல்ல சிங்கி கூட்டம் கேட்டால் அவன் சொன்னான் இவன் சொன்னான் என்று சொல்லு நம் காதுகளில் பூ சுத்துவார்கள்
Cancel
பாகிஸ்தான் ஆபத்து பற்றிப் பேசினால் மூர்க்க கூட்டத்திற்கு ஆத்திரம் வருவது இயற்கைதான். உனக்கேன் 🤔ஆத்திரம்? 4 போர்களாலும் ராணுவ செலவாகும் காஷ்மீர்😡 பயங்கரவாதத்தாலும்தான் நம் வரிப்பணம் வீணாகி வளர்ச்சி தடைபட்டது. இதனை உம்மால் மறுக்க முடியுமா? உள்ளூர் மூர்க்க ஆட்களின் மறைமுக ஆதரவும் இல்லாமல் பாக்கி, லஷ்கர், தாலிபான், வகாபி தவ்ஹீத் ஐ எஸ் இங்கு வாலாட்ட முடியுமா?...
Cancel
மேலும் 2 கருத்துக்கள்...
×
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.