பால் உற்பத்தியை அதிகரிக்க கால்நடைகளுக்கு 'சாக்லேட்'

3 years ago 741

ஜபல்பூர்-மத்திய பிரதேசத்தில் பால் உற்பத்தியை அதிகரிக்க வழிவகுக்கும் வகையில் கால்நடைகளுக்கான பிரத்யேக சாக்லேட்டை ஆராய்ச்சியாளர்கள் தயாரித்துஉள்ளனர்.

latest tamil news

மத்திய பிரதேசத்தின் ஜபல்பூர் மாவட்டத்தில் உள்ள நாநாஜி தேஷ்முக் கால்நடை அறிவியல் பல்கலையைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இரண்டு மாதங்களாக ஒரு ஆராய்ச்சி மேற்கொண்டு வந்தனர். இதன் முடிவில் பால் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில், ஆடு, மாடு போன்ற கால்நடைகளுக்கான சாக்லேட்டை தயாரித்துள்ளனர்.இதுகுறித்து பல்கலையின் துணை வேந்தர் திவாரி கூறியதாவது:'மல்டி வைட்டமின்' புரதச் சத்துக்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த இந்த சாக்லேட்டை தீவனம் இல்லாத நேரங்களில் கால்நடைகளுக்கு வழங்கலாம் அல்லது இதர தீவனங்களுடன் சேர்த்தும் கூட இதை வழங்கலாம்.

இந்த சாக்லேட்டுகளை உண்ணும் கால்நடைகள் அதிக பால் சுரக்கும்; இது, இனப்பெருக்க வளர்ச்சி மற்றும் கருத்தரித்தல் விகிதத்தையும் அதிகரிக்கச் செய்யும்.மாநில கால்நடை பராமரிப்பு துறைக்கு உதவி வரும் எங்கள் பல்கலைக்கழகம் விரைவில் மாநிலம் முழுதும் உள்ள விவசாயிகளுக்கு இந்த சாக்லேட்டு களை வினியோகிக்கும் பணிகளை துவங்கும். 500 கிராம் எடையிலான ஒரு சாக்லேட் 25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட உள்ளது

latest tamil news

.இந்த சாக்லேட்டுகளை விற்பனை செய்ய, மாநில அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. ஒப்புதல் கிடைத்ததும் விரைவில் அது சந்தையில் அறிமுகப்படுத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை

Barakat Ali இந்த சாக்லேட்டுகள் ஹார்மோன் சுரப்பை அதிகப்படுத்தினால், அதன் மூலம் கிடைக்கும் பாலை அருந்துபவர்களுக்கு ஹார்மோன் பிரச்னைகள் உருவாகும் உதாரணமாக பெண் பிள்ளைகள் விரைவில் பருவம் எய்துவார்கள் இறைவனின் திட்டப்படி நடக்கத்தான் மனிதனுக்கு கடமை உள்ளது

Cancel

NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா

NicoleThomson போச்சுடா இதையும் விட்டு வைக்கவில்லை போல

Cancel

×

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.

4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

Read Entire Article