புதிய வீரர்கள், நவீன ஆயுதங்கள், ட்ரோன்: எல்லையில் குளிரை தாங்க வீரர்களுக்கு வசதி

3 years ago 709

Indian Army, Ladakh, China

புதுடில்லி : கிழக்கு லடாக்கில் சீன எல்லையை ஒட்டி நிறுத்தப்பட்டுள்ள படைகளுக்கு, குளிர்காலத்தை சமாளிக்கும் வகையில் பல வசதிகள் செய்யப்பட்டுள்ளன. நவீன ஆயுதங்கள், 'ட்ரோன்'களுடன், புதிய மாற்று வீரர்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

கண்காணிப்பு

இந்தியா மற்றும் சீனா, 3,488 கி.மீ., துார எல்லையை பகிர்ந்து கொள்கின்றன. கடந்தாண்டு மே மாதத்தில் கிழக்கு லடாக்குக்குள் நுழைய சீன ராணுவம் முயன்றது. அதை நம் ராணுவம் தடுத்து நிறுத்தியது. அதைத் தொடர்ந்து எல்லையில் இரு நாட்டு படைகளும் குவிக்கப்பட்டுள்ளன.

இதற்கு முன் அவ்வப்போது கண்காணிப்பு மட்டுமே இருந்து வந்த கரடுமுரடான எல்லைப் பகுதியில், தற்போது படைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. கடந்தாண்டு குளிர்காலத்தில் நம் படை வீரர்கள் அதிக சிரமத்தை சந்திக்க நேர்ந்தது. குளிர் மற்றும் பனிக் காலம் விரைவில் துவங்க உள்ளதால் வீரர்களுக்கு தேவையான வசதிகள் முன்னதாகவே செய்யப்பட்டுள்ளன.

எல்லை வரை செல்வதற்கு தேவையான சாலைகள், பாலங்கள் ஏற்கனவே கட்டப்பட்டுள்ளன. மேலும், வீரர்கள் தங்குவதற்கான வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. தற்போதைய நிலையில் எல்லையில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே சீனாவுடனான எல்லையில், ஐ.டி.பி.பி., எனப்படும் இந்தோ - திபெத் எல்லை போலீஸ் படை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளது.

latest tamil news

தகுந்த பதிலடி

குளிர்காலத்தை சமாளிக்க வசதியாக அங்கு நீண்ட நாட்கள் பணியில் இருந்த வீரர்கள் வேறு பணிகளுக்கு அனுப்பப்பட்டு, புதிய வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டுஉள்ளனர். குளிரை சமாளிக்க தேவையான உடைகள் வழங்கப்பட்டுள்ளன.அடுத்த சில மாதங்களுக்கு தேவையான உணவு மற்றும் எரிபொருட்களும் வழங்கப்பட்டுள்ளன. கிழக்கு லடாக்கில் இதற்காக புதிய கிடங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன.

பாதுகாப்பு பணியில் உள்ள வீரர்களுக்கு அதிநவீன துப்பாக்கிகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. கண்காணிப்பு பணிக்காக 'ட்ரோன்'களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. எந்த சீதோஷ்ண நிலையிலும் பயணிக்கக் கூடிய ஹெலிகாப்டர்கள், வஜ்ரா ரக பீரங்கிகளும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. தேவைப்படும் போது உடனடியாக களமிறங்க, 'ரபேல்' போர் விமானங்களும் தயார் நிலையில் உள்ளன.

எதிரிகளின் ட்ரோன்களை தாக்கி அழிக்கக் கூடிய ஏவுகணைகளும் எல்லைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.கடும் குளிர் மற்றும் பனியை பயன்படுத்தி, சீன ராணுவம் தாக்குதல் நடத்த முயன்றால், தகுந்த பதிலடி கொடுக்க படைகள் தயாராக உள்ளதாக ராணுவம் கூறியுள்ளது.

Advertisement

வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை

Vaithilingam Ahilathirunayagam "நாடு அதை நாடு, நாடாவிட்டால் ஏது வீடு" நாடில்லை என்றால், கோடி கோடியாகச் சேர்த்து என்ன பயன்? மண்டரினில்தான் பணம் அச்சடிக்க வேண்டும்.

Cancel

Anand எமது அரசுக்கு பாராட்டுக்கள்....

Cancel

Kasimani Baskaran ஏதோ மோடி, பரிக்கர் புண்ணியத்தில் தக்க தறுணத்தில் கிட்டத்தட்ட ஆர்டர் கொடுத்த எல்லா ரபேல் ஜெட்களும் இந்தியா வந்து சேர்ந்து விட்டது. காங்கிரஸ் ஆட்சியாக இருந்திருந்தால் கமிசன் வேண்டும் என்று இன்னும் பேரம் மட்டுமே பேசிக்கொண்டு இருந்திருப்பார்கள்.

Cancel

மேலும் 4 கருத்துக்கள்...

×

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.

4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

Read Entire Article