வில்லியனுார் : அரும்பார்த்தபுரம் புளு ஸ்டார் ஆங்கில பள்ளி, நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில், இயற்கை உணவு திருவிழா நடந்தது.அரும்பார்த்தபுரம் புளு ஸ்டார் ஆங்கில மேல்நிலைப் பள்ளி, நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் ஏழுநாள் சிறப்பு முகாம் நடந்தது. அதில் உணவு திருவிழா மற்றும் வித்யாஞ்சலி 2.0 நிகழ்ச்சி நடந்தது.நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் மெய்வழி ரவிக்குமார் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் வரலட்சுமி வரவேற்றார். பள்ளி கல்வி இணை இயக்குனர் சிவகாமி உணவு திருவிழாவை பார்வையிட்டு இயற்கை உணவு செய்முறை குறித்து சிறப்புரையாற்றினார்.மாநில நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் குழந்தைசாமி, ஒருங்கிணைப்பாளர் மதிவாணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பள்ளி துணை முதல்வர் சாலை சிவசெல்வம் நன்றி கூறினார்.விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் வீர முத்து, கலைச்செல்வி மற்றும் ஆசிரியர்கள் செய்தனர்.
Advertisement