திருப்பூர்:நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில், திருப்பூரின் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தக மதிப்பு, 13 ஆயிரம் ரூபாய் கோடியை எட்டியுள்ளது.கொரோனாவால் கடந்த 2020 - 21ம் நிதியாண்டுக்கான, பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம் சரிவை சந்தித்தது. தொற்று பாதிப்பு குறைந்ததால், நடப்பு நிதியாண்டு துவக்கம் முதலே, இந்திய பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம் எழுச்சி பெற்றுவருகிறது.
நிதியாண்டின் முதல் அரையாண்டாகிய ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான ஆறு மாதங்களில், நாட்டின் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம், 26 ஆயிரத்து 706 கோடி ரூபாயை எட்டியுள்ளது.இந்திய பின்னலாடை ஏற்றுமதியில், திருப்பூரின் பங்களிப்பு, 50 சதவீதத்துக்கும் மேல் உள்ளது. அந்தவகையில், நிதியாண்டின் முதல் அரையாண்டில், திருப்பூரின் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம், 13 ஆயிரத்து 285 கோடியை தொட்டுள்ளது.ரூ.28 ஆயிரம் கோடிவெளிநாடுகளிலிருந்து, திருப்பூர் நிறுவனங்களுக்கு ஆர்டர் வருகை அதிகரித்துள்ளது. வாய்ப்புகளை வசப்படுத்தி, ஆடை தயாரித்து அனுப்புவதில் ஏற்று மதியாளர்கள் முனைப்பு காட்டி வருகின்றனர். அடுத்த ஆறு மாதங்கள், ஆர்டர் வருகை மேலும் அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. எனவே, நடப்பு நிதியாண்டின், திருப்பூரின் மொத்த பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம், 28 ஆயிரம் கோடியை எட்டிப்பிடித்துவிடும் என, தொழில் துறையினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
மத்திய அரசு, ஏற்றுமதி துறையினருக்கு, நிலுவையில் உள்ள சலுகை தொகை 56 ஆயிரத்து 27 கோடி ரூபாயை விடுவித்துள்ளது. அவசர கால கடன் திட்டம் கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இவையெல்லாம், ஏற்றுமதி துறையினருக்கு கைகொடுக்கின்றன.கப்பல் இயக்கம் பாதிப்பு, கன்டெய்னர் தட்டுப்பாட்டால், வெளிநாடுகளிலிருந்து ஆடை தயாரிப்புக்கு தேவையான பொருட்களை தருவிப்பதிலும், உற்பத்தி செய்த ஆடைகளை, வெளிநாட்டு வர்த்தகருக்கு உரிய காலத்துக்குள் அனுப்புவதிலும் சிக்கல் நீடிக்கிறது. தடைகள் விலகினால், ஏற்றுமதி வர்த்தகத்தில், இலக்கை அடைவது எளிது.மத்திய அரசு, ஏற்றுமதி துறையினருக்கு, நிலுவையில் உள்ள சலுகை தொகை 56 ஆயிரத்து 27 கோடி ரூபாயை விடுவித்துள்ளது. அவசர கால கடன் திட்டம் கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
Advertisement