உலகம்
Published : 09,Oct 2021 08:40 AM
இந்தியா உள்பட அனைத்து நாடுகளில் இருந்தும் முழுமையாக தடுப்பூசி போட்ட சுற்றுலாப் பயணிகள் வரலாம் என்று இலங்கை அறிவித்துள்ளது.
முழுமையாக தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டவர்கள், கொரோனா பரிசோதனையில் வைரஸ் தொற்று இல்லை என சான்று வைத்திருப்பவர்கள், தலைநகர் கொழும்புவுக்கு வந்தவுடன் பரிசோதனை செய்ய வேண்டியது இல்லை என இலங்கை அரசின் புதிய வழிகாட்டுதலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பயணிகள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டியதும் இல்லை. பயணத்துக்கு குறைந்தது 14 நாட்களுக்கு முன்பு ஒருவர் இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்றும் இலங்கை தெரிவித்துள்ளது.
GO TO TOP
© Copyright Puthiyathalaimurai 2021. All rights reserved