சென்னையில் மெரினா கடற்கரையில் அலையில் சிக்குபவர்களை ட்ரோன்கள் உதவியுடன் மீட்க கடலோர பாதுகாப்பு குழுமம் திட்டமிட்டுள்ளது.
சென்னையில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இந்த குழுமம், அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைந்து புதிய திட்டத்தை வகுத்துள்ளது. மெரினா கடற்கரை உயிர்காப்பு பிரிவில் ட்ரோன்களைப் பயன்படுத்தி உயிருக்கு போராடுபவர்களை மீட்க திட்டமிடப்பட்டுள்ளது. கடல் அலையில் சிக்கி தத்தளிப்பவர்களுக்கு ட்ரோன்கள் மூலம் விரைவாக மிதப்பான்களை கொடுத்து, நீரில் மூழ்காமல் காக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
மெரினா கடற்கரையில் 24 மணி நேர ஆம்புலன்ஸ் சேவையை ஏற்படுத்தவும், கண்காணிப்பு கோபுரங்களை அதிகரிக்கவும், 50 ஆயுதப்படைக் காவலர்களுக்கு உயிர்காக்கும் நீச்சல் பயிற்சி அளித்து பணியமர்த்தவும், உயிர் காக்கும் பயிற்சி பெற்ற 12 மீனவ இளைஞர்களை ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.