நாட்டின் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி பேசியுள்ளார்.
டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றுவருகிறது. இதில் உரை நிகழ்த்திய சோனியா காந்தி இந்திய பொருளாதாரம் மிக மோசமான நிலையில் இருப்பதாகவும் ஆனால் எல்லாம் நன்றாக இருப்பதுபோல் காட்ட மத்திய அரசு முயற்சித்து வருவதாகவும் குற்றஞ்சாட்டினார். பொருளாதாரம் மோசமாக இருப்பதற்கு பொதுத்துறை நிறுவனங்கள் விற்பனை ஒரு உதாரணம் என சோனியா காந்தி கூறினார். பொதுத்துறை நிறுவனங்கள் பொருளாதார முன்னேற்றத்திற்காக மட்டும் உருவாக்கப்படவில்லை என்றும், அவை சமூக முன்னேற்றத்திற்கும் காரணமாக அமைகின்றன என்றும் சோனியா காந்தி பேசினார். வேளாண் சட்ட விவகாரம், லக்கிம்பூர் விவகாரம் உள்ளிட்டவை குறித்தும் சோனியா காந்தி பேசினார்.
”எனது 4 வருட பாரத்தை இறக்கி வைத்துள்ளேன்”- ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலா பேட்டி
காங்கிரஸ் கட்சிக்கு முழு நேர தலைவரை தேர்வு செய்யக்கோரி அக்கட்சியின் மூத்த தலைவர்கள் தலைமைக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர். இந்த சூழலில் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தலைமையில் செயற்குழு கூட்டம் நடந்து வருகிறது. இக்கூட்டத்தில் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்கள் அசோக் கெலாட், சரண்ஜித் சிங் சன்னி, பூபேஷ் பாகெல் மற்றும் ப.சிதம்பரம் போன்ற கட்சியின் மூத்த தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். உட்கட்சி தேர்தல் நடத்தி முழு நேர தலைவரை தேர்வு செய்வது, பஞ்சாப், ராஜஸ்தான், சட்டீஸ்கர் மாநிலங்களில் பூசல்கள் நிலவுவது உள்ளிட்டவை குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.