சாலை பாதுகாப்பு விதிகளின் முக்கியத்துவம் குறித்து ஸ்குவிட் கேம் இணையதள தொடரை மேற்கொள் காட்டிய மும்பை போலீசார்.
கொரிய இணையதள தொடரான ஸ்குவிட் கேம் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. கடந்த மாதம் செப்டம்பர் 17ம் தேதி வெளியான இந்த தொடரை உலகம் இதுவரை 111மில்லியன் பேர் பார்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடரில் வரும் முதல் விளையாட்டின் பெயர், 'ரெட் லைட், கிரீன் லைட்'. அந்த விளையாட்டின்படி, ரெட் லைட் என்று கூறிந்த ராட்சத பொம்மை கூறி திரும்பும்போது போட்டியாளர்களிடம் அசைவுகள் தெரிந்தால் அவர்களை சுட்டு வீழ்த்திவிடும்.
இதை அப்படியே சாலை விதிகளுடன் மும்பை போலீசார் ஒப்பீடு செய்துள்ளனர். மும்பை போலீசாரின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ''சாலையில் ரெட் லைட் ஒளிரும்போது அங்கேயே நின்று உங்கள் வாழ்வை காப்பாற்றிக்கொள்ளுங்கள்'' என்று பதிவிடப்பட்டுள்ளது. #EliminateSpeedGames என்ற தலைபிடப்பட்டு சிறிய காணொளியும் பதிவேற்றப்பட்டுள்ளது.
இந்த வீடியோவை 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர். போலீசாரின் இந்த சுவாரஸ்யமான விழிப்புணர்வு பலரையும் கவர்ந்துள்ளது.