உடுப்பி:ஆசிரியராக பணியாற்றும் விவசாயி, தன் விளைச்சலை வன விலங்குகளிடமிருந்து காப்பாற்ற, புதுமையான தந்திரத்தை கையாளுகிறார்.
உடுப்பியின் கிரியார் கோவிந்த் ராவ், உயர்நிலை பள்ளியொன்றில் அறிவியல் ஆசிரியராக பணியாற்றுகிறார். இவர் விவசாயத்திலும் ஈடுபடுகிறார். ஓய்வு கிடைக்கும் போது வயலில் விவசாயம் செய்கிறார். தற்போது நெல் விளைவித்துள்ளார். வன விலங்குகளால், விளைச்சல் பாழாகும் அபாயம் இருந்தது. இதற்காக அவர் வினோத வழியை கண்டுப்பிடித்துள்ளார்.
தென்னை மரத்துக்கு இடையே கயிறு கட்டி அதில் பிளாஸ்டிக் டப்பாவை தொங்க விட்டார். இரவு நேரத்தில் இரண்டு மின் விளக்குகளை 'ஆன்' செய்து, டப்பாவுக்குள் வைப்பார்.அது காற்றில் சுற்றுவதால் அதன் வெளிச்சத்தை கண்டு, வன விலங்குகள் வயலில் கால் வைப்பதில்லை. மேலும், இரண்டு ஸ்பீக்கர்களை பொருத்தியுள்ளார்.
இதிலிருந்து புலி, யானை, சிறுத்தை, நாய் என பல விலங்குகள் கூவும் சத்தம் கேட்கும்படி செய்துள்ளார். இவருக்கு மகன் ஆயுஷ்யாவும் உதவியாக உள்ளார். இரவில் தந்தையுடன் லைட்டுகள், ஸ்பீக்கர் வைக்க உதவுகிறார். விளக்குகள், ஸ்பீக்கர்களை ஒரு முறை 'சார்ஜிங்' செய்தால், எட்டு மணி நேரம் செயல்படும்.
தினமும் இரவில் லைட்டுகள், ஸ்பீக்கர்களை வைப்பர். காலையில் நிலத்துக்கு சென்று, அவற்றை வீட்டுக்கு கொண்டு வந்து, சார்ஜிங் போடுவர். கோவிந்தராவின் உபாயத்தால், வன விலங்குகள் இவரது வயல் பக்கமே திரும்புவதில்லை.இவரை பார்த்து, மற்ற விவசாயிகளும் கூட இதே உபாயத்தை பின்பற்ற துவங்கியுள்ளனர்.
Advertisement