வாகன சான்றிதழ்களை புதுப்பிக்க அக்., 31 வரை மட்டுமே அவகாசம்

3 years ago 721

No Extension, Driving Licence, renewal

புதுடில்லி: 'கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வாகன ஓட்டுனர் உரிமம், வாகனப் பதிவு சான்றிதழ் உள்ளிட்டவற்றை புதுப்பிக்க அளிக்கப்பட்டுள்ள அவகாசம், வரும் 31ம் தேதிக்குப் பின் நீட்டிக்கப்படாது' என, மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.

வாகன ஓட்டுனர் உரிமம், வாகனப் பதிவு சான்றிதழ் உள்ளிட்டவற்றை புதுப்பிக்க கொரோனா வைரஸ் பரவல் காலத்தில் ஏழு முறை அவகாசம் நீட்டிக்கப்பட்டது. ஏழாவது முறைகடந்த 2020 மார்ச்சில் இருந்து அளிக்கப்பட்ட இந்த அவகாசம் கடந்த மாதம் ஏழாவது முறையாக நீட்டிக்கப்பட்டது. அதன்படி வரும் 31ம் தேதிக்குள் புதுப்பிக்க வேண்டும்.

இந்நிலையில், மாநில அரசுகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் கூறியுள்ளதாவது: வாகன ஆவணங்களைப் புதுப்பிக்க, வரும் 31ம் தேதிக்குப் பின் அவகாசம் நீட்டிக்கப்படாது. அதனால், புதுப்பிக்கக் கோரி நிலுவையில் உள்ள அனைத்து விண்ணப்பங்கள் மீதும் இம்மாத இறுதிக்குள் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

latest tamil news

சிறப்பு முகாம்


மக்கள் நேரடியாக வருவதை தவிர்க்கும் வகையில் 'ஆன்லைன்' வாயிலாக விண்ணப்பிப்பது, பரிசீலிப்பதை மேற்கொள்ள வேண்டும். தேவைப்படும் பகுதிகளில் சிறப்பு முகாம்களுக்கு ஏற்பாடு செய்யலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. சூழ்நிலைக்கு ஏற்ப இந்த கால அவகாசத்தை அந்தந்த மாநிலங்கள் நீட்டித்துக் கொள்ளலாம் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து புதுப்பிப்பதற்கான அவகாசத்தை நவ., 30ம் தேதி வரை நீட்டித்து டில்லி அரசு அறிவிப்பு வெளியிட்டுஉள்ளது.

Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

×

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.

4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

Read Entire Article