கேரள நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் சிக்கிய நடிகர் திலீப் மீது, விசாரணை அதிகாரிகளை மிரட்டியதாக மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2017ஆம் ஆண்டு கேரள நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதான நடிகர் திலீப், பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில், விசாரணை அதிகாரிகளை மிரட்டியதாக நடிகர் திலீப் உட்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
விசாரணை அதிகாரியான டிஎஸ்பி பைஜூ பவுவலோஸ் என்பவரை நடிகர் திலீப், அவரது சகோதரர், அவரது சகோதரியின் கணவர் உள்ளிட்ட 6 பேர் மிரட்டியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக இயக்குனர் பாலாசந்திரன் என்பவர் அளித்த ஆடியோ ஆதாரங்களன் அடிப்படையில், அவர்கள் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: காணாமல்போன பெண்ணை மீட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீஸ் ஏட்டு பணியிடை நீக்கம்