போபால்-விபத்தில் சிக்கியோரை மீட்டு, உரிய மருத்துவ வசதி கிடைக்கும் வகையில் உதவுவோருக்கு, 5,000 ரூபாய் பரிசு வழங்கும் மத்திய அரசின் திட்டத்தை, மத்திய பிரதேச அரசு அமல்படுத்திஉள்ளது.
1.32 லட்சம் பேர்கடந்தாண்டு நாடு முழுதும் நடந்த 3.66 லட்சம் சாலை விபத்துகளில் 1.32 லட்சம் பேர் இறந்து உள்ளனர். இவர்களில் பலர், 'கோல்டன் ஹவர்' எனப்படும், விபத்து நடந்த ஒரு மணி நேரத்துக்குள் சிகிச்சை அளிக்காததால் இறந்து உள்ளனர்.இந்நிலையில் 'சாலை விபத்துகளில் சிக்குவோரை மீட்டு மருத்துவமனைகளில் சேர்ப்போருக்கு 5,000 ரூபாய் பரிசு வழங்குவதோடு, சிறந்த காப்பாளர் விருது வழங்கி கவுரவிக்கப்படும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது.இதைத் தவிர ஒவ்வோர் ஆண்டும் 10 சிறந்த காப்பாளர்களுக்கு மத்திய அரசின் விருது மற்றும் 1 லட்சம் ரூபாய் பரிசும் வழங்கப் படும்.
இந்த திட்டத்தை, முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான பா.ஜ., அரசு அமைந்துள்ள மத்திய பிரதேசம் அமல்படுத்திஉள்ளது.எதிர்பார்க்கலாம்இது குறித்து, மாநில போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு கூடுதல் டி.ஜி.பி.,யான ஜனார்தன் கூறியுள்ளதாவது:விபத்தில் சிக்குவோருக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தால், அவர்களை காப்பாற்ற முடியும். விசாரணைக்கு ஆஜராக வேண்டும் போன்ற சட்ட சிக்கல்கள் ஏற்படுவதால், விபத்தில் சிக்குவோரை காப்பாற்றுவதற்கு பலர் முன்வருவதில்லை.
இந்நிலையில், விபத்தில் சிக்குவோரை காப்பாற்றுவோருக்கான மத்திய அரசின் பரிசு திட்டம், சாலை விபத்துகளில் உயிர் பலி ஏற்படுவதை வெகுவாக குறைக்கும் என, எதிர்பார்க்கலாம்.இவ்வாறு அவர் கூறினார்
Advertisement
வாசகர் கருத்து (4)
- புதியவை
- பழையவை
- அதிகம் விவாதிக்கப்பட்டவை
- மிக மிக தரமானவை
- மிக தரமானவை
- தரமானவை
×
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.