ஷிவமொகா : ஓம் சக்தி கோவிலுக்கு சென்று வந்தவர்களால், ஷிவமொகாவில் கொரோனா தொற்று பரவுகிறது. நேற்று 63 பேருக்கு தொற்று உறுதியானது.ஷிவமொகாவின் ஷிகாரிபுரா, பத்ராவதி, ஹொசநகரில் வசிக்கும் நுாற்றுக்கணக்கானோர், ஆண்டு தோறும் தமிழகத்தின் மேல்மருவத்துார் ஆதிபராசக்தி கோவிலுக்கு செல்வது வழக்கம். இம்முறையும் சென்றிருந்தனர்.தற்போது கொரோனா பரவுவதால், வெளியூர்களிலிருந்து திரும்புவோருக்கு, கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது. கோவிலிருந்து திரும்பியோருக்கும் பரிசோதனை நடத்தப்படுகிறது. நேற்று முன் தினம் வரை. 20 பேருக்கு தொற்று ஏற்பட்டிருந்தது.நேற்றும் கூட 63 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர். தொற்று பரவுவதால் மக்கள் பீதியடைந்துஉள்ளனர்.
Advertisement