நாக்பூர் : ''ஜம்மு - காஷ்மீர் மக்கள் மனதில் மீண்டும் அச்சத்தை ஏற்படுத்துவதற்காக, அங்கு வசிக்கும் ஹிந்துக்களை பயங்கரவாதிகள் கொன்று குவிக்கின்றனர். எனவே, எல்லையில் நம் ராணுவம் எந்நேரமும் விழிப்புடன் இருக்க வேண்டும்,'' என, ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத் தெரிவித்தார்.
உத்தரவு
ஜம்மு - காஷ்மீரில், ஐந்து நாள் இடைவெளியில் ஏழு அப்பாவி பொதுமக்கள் பயங்கரவாதிகளால் சமீபத்தில் கொல்லப்பட்டனர். இதில் நான்கு பேர் ஹிந்துக்கள். இந்நிலையில், மஹாராஷ்டிராவின் நாக்பூரில் நேற்று நடந்த விஜய தசமி விழா நிகழ்ச்சியில், ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத் பேசியதாவது:அரசு நிர்வாகத்தின் கீழ் உள்ள ஒரு சில கோவில்கள் மட்டுமே சிறப்பாக செயல்படுகின்றன. அப்படி செயல்படாத கோவில்களின் சொத்துக்கள் கொள்ளை அடிக்கப்படுகின்றன. பல கோவில் சொத்துக்களில் முறைகேடு நடப்பது சமீபத்தில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
ஹிந்து கோவில் சொத்துக்களால், ஹிந்து கடவுள்கள் மீது நம்பிக்கை இல்லாத பிற மதத்தினர் பலன் அடைகின்றனர். ஹிந்துக்களுக்கு தேவைப்பட்டாலும், அந்த பலன்களை அவர்களால் பெற முடியவில்லை.கோவில்களை நிர்வகிப்பது குறித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு ஒன்றை பிறப்பித்து உள்ளது. அதில், 'கோவில்களை அரசு உரிமை கொண்டாட முடியாது. கடவுள் மட்டுமே அதன் உரிமையாளர். பூஜை செய்வோர் நிர்வாகிகளை போன்றவர்கள். 'அதை, அரசு சில காலம் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து நிர்வகிக்கலாமே தவிர, உரிமை கோர முடியாது' என, நீதிபதிகள் தெரிவித்தனர்.எனவே, கோவில்களை நிர்வகிக்கும் விவகாரத்தில் முடிவு எடுக்கப்பட வேண்டும்.
அச்சம்
நம் நாட்டு மக்கள் தொகையில், பாரதிய வம்சாவளியில் தோன்றிய மதங்களைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை 88 சதவீதமாக இருந்தது; இது, தற்போது 83.8 சதவீதமாக குறைந்துள்ளது. முன்னர் 9.8 சதவீதமாக இருந்த முஸ்லிம் மதத்தினரின் எண்ணிக்கை 14.23 சதவீதமாக உயர்ந்துள்ளது.எனவே, அடுத்த 50 ஆண்டுகளை மனதில் வைத்து நம் தேசிய மக்கள் தொகை கொள்கையில் சீர்திருத்தம் மேற்கொள்ள வேண்டும்.
ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து திரும்ப பெறப்பட்டதால், சாமானிய மக்கள் பலன் அடைந்துள்ளனர். பயங்கரவாதிகள் குறித்து மக்கள் மனதில் இருந்த அச்சம் விலகி உள்ளது. இந்த அச்சத்தை பயங்கரவாதிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி வந்தனர். எனவே, மக்கள் மனதில் மீண்டும் அச்சத்தை விதைக்கவே, அங்கு வசிக்கும் ஹிந்து, சீக்கியர் போன்ற சிறுபான்மையினரை குறிவைத்து பயங்கரவாதிகள் கொன்று குவிக்கின்றனர். இதை மத்திய அரசு சரியாக கையாள வேண்டும். எல்லையில் உள்ள நம் ராணுவம் எந்நேரமும் விழிப்புடன் செயல்பட வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.
Advertisement
வாசகர் கருத்து (1+ 45)
- புதியவை
- பழையவை
- அதிகம் விவாதிக்கப்பட்டவை
- மிக மிக தரமானவை
- மிக தரமானவை
- தரமானவை
இந்தியாவில் உள்ள எல்லா மாநிலங்களிலும் போலி ஆதார் கார்டை வைத்துக்கொண்டு நடமாடும் தீவிரவாதிகளையும் பயங்கரவாதிகளையும் வேட்டையாடவேண்டும். இங்கிருக்கும் முஸ்லீம் தேசவிரோதிகள் அவர்களுக்கு வேண்டிய எல்லா உதவிகளையும் செய்து வருகிறார்கள். இல்லாவிட்டால் அங்குமிங்கும் போலி ஆதார் கார்ட் வைத்துக்கொண்டு முஸ்லிமகள் நடமாடுவார்கள். உச்சநீதிமன்றம் எல்லா உயர்நீதிமன்றங்களுக்கும் இந்த சுற்றறிக்கை அனுப்பி தேசவிரோத குற்றவாளிகளை சிறையில் அடைக்க ஆணை பிறப்பிக்கவேண்டும். பயங்கரவாதம் தலைதூக்கினால் அப்பாவி மக்கள் சாக நேரிடும். உஷார்.
Cancel
×
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.