’அஜித் 61’ படத்தில் இணையும் ஜிப்ரான்?

2 years ago 845

Puthiyathalaimurai-logo

சினிமா

08,Jan 2022 03:56 PM

Music-director-Ghibran-to-compose-music-for-Ajith-61-movie

’அஜித் 61’ படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

‘நேர்கொண்ட பார்வை’, ‘வலிமை’ படங்களைத் தொடர்ந்து அஜித்-ஹெச்.வினோத்-போனி கபூர் கூட்டணி மீண்டும் மூன்றாவது முறையாக ‘அஜித் 61’ படத்தில் இணைகின்றனர். இப்படத்தினை, ஹெச் வினோத் புதிய தலைமுறை டிஜிட்டலுக்கு அளித்த பிரத்யேகப் பேட்டியிலும் உறுதி செய்திருந்தார்.

‘வலிமை’ வெளியானவுடன் ‘அஜித் 61’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் மற்ற படக்குழுவினர் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில், ‘அஜித் 61’ படத்தில் இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே, வினோத்தின் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்திற்கு ஜிப்ரான்தான் இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

GO TO TOP

© Copyright Puthiyathalaimurai 2022. All rights reserved

செய்தி மடலுக்கு பதிவு செய்க

Read Entire Article