இடி, மின்னல் தாக்குதலிலிருந்து தப்பிப்பது எப்படி? - அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவை

3 years ago 718

Puthiyathalaimurai-logo

ஹெல்த்

09,Nov 2021 11:45 AM

what-will-you-do-when-lightning-strikes

இடி மற்றும் மின்னலினால் ஏற்படும் அபாயத்தை மக்கள் குறைத்து மதிப்பிடுவதாலும், விழிப்புணர்வு இல்லாததாலும் மனித உயிரிழப்புகள் மற்றும் ஊனங்கள் அதிகமாக ஏற்படுகின்றன. மின்னல் காரணமாக ஏற்படும் சேதங்கள் மற்றும் இழப்புகளை தவிர்ப்பதற்காக செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை என்னென்ன?

* இடி, மின்னல் தாக்கமலிருப்பதற்கு கட்டிடங்கள் ஒதுங்கக்கூடிய சிறந்த இடமாகும். மரங்களின் கீழே ஒதுங்குவது பாதுகாப்பானது அல்ல.

* கார், பேருந்து உள்ளிட்ட முழுமையாக மூடப்பட்ட வாகனங்களுக்குள் இருக்கும்போது இடி, மின்னல் தாக்காது.

* பாதுகாப்பான இடங்கள் ஏதும் இல்லாதபோது உயரமான பொருள்களுக்கு அருகே செல்வதை தவிர்க்கவும்.

* மின்னல் ஏற்படும்போது செல்போன், தொலைபேசி, டிவி, மிக்ஸி, கிரைண்டர், கணினியை பயன்படுத்தக் கூடாது.

* குழாய்‌ போன்ற உலோக இணைப்புகள்‌ வழியாக மின்னல் பாய்ந்து செல்லக்கூடியது என்பதால், மழை பெய்யும் நேரங்களில் குளிப்பது, பாத்திரம்‌ கழுவுவது போன்ற தண்ணீர்‌ புழங்கும்‌ வேலைகளை தவிர்க்கவும்.

* வெட்ட வெளியில் உலோகப் பொருட்களை உபயோகப்படுத்தாமல் இருப்பது நல்லது.

image

* ஏரி, குளம்‌, குட்டை, நீச்சல் குளம் போன்ற நீர்‌ நிலைகளிலிருந்து உடனடியாக வெளியேறவும்‌.

* உயர் அழுத்த மின் தடங்களை தாங்கி நிற்கும் கோபுரங்களுக்கு அருகில் செல்வதை தவிர்க்கவும்.

* வீடுகளில் திறந்த நிலையில் உள்ள ஜன்னல், கதவு அருகில் நிற்பதை தவிர்க்கவும்.

* வெட்டவெளியில் நிற்கும்போது உடலில் உள்ள உரோமங்கள் சிலிர்ப்பது, உடல் கூச்சம் ஏற்படுவது மின்னல் தாக்குவதற்கான அறிகுறிகளாகும். அச்சமயம் தரையில் குனிந்த நிலையில் உடனடியாக அமர்ந்திட வேண்டும்.

* இடி, மின்னலின்போது கால்நடைகளை மரத்தடியில் கட்டி வைத்திருப்பதை தவிர்க்கவும்.

* மறைவிடம் அற்ற திறந்த மலைப்பகுதியில்‌ இருந்தால், உடனடியாக உயரமான மலை முகடுகள்‌, சிகரங்கள்‌ ஆகியவற்றிலிருந்து விரைந்து கீழிறங்கி சமவெளிக்குச் செல்லவும்‌.

GO TO TOP

© Copyright Puthiyathalaimurai 2022. All rights reserved

செய்தி மடலுக்கு பதிவு செய்க

Read Entire Article