’ஊ சொல்றியா’ பாடல் சர்ச்சையானதில் கவலை இல்லை - இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத்

2 years ago 869

Puthiyathalaimurai-logo

சினிமா

07,Jan 2022 04:44 PM

pushpa-music-director-devi-sri-prasad-interview

‘புஷ்பா’ படத்தில் பணியாற்றியது எனக்கு ஐந்து வெவ்வேறு படங்களில் பணியாற்றியதுபோல் இருந்தது. ‘ஊ அன்டவா’ பாடல் சர்ச்சையானதில் எனக்கு கவலை இல்லை” என்றும் தெரிவித்துள்ளார் இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத்.

அல்லு அர்ஜுன் - ஃபகத் ஃபாசில் - ராஷ்மிகா நடிப்பில் சுகுமார் இயக்கிய ’புஷ்பா’ கடந்த மாதம் 17 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இசைதான் ’புஷ்பா’ படத்தின் உண்மையான ஹீரோ என்று சொல்லும் அளவுக்கு இப்படத்தின் இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் இசையில் அனைத்துப் பாடல்களும் சூப்பர் ஹிட் அடித்தன. தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகியுள்ள ‘புஷ்பா’ படத்தில் பணியாற்றிய அனுபவம் குறித்து இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார்.

Why Devi Sri Prasad is the highest paid music composer in Tollywood |  Telugu Movie News - Times of India

இது தொடர்பாக அவர் பேசுகையில், “ஒரு மொழியில் வெற்றியடையும் பாடல்கள் மற்றொரு மொழியில் வெற்றியடையாமல் போகலாம். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகள் எனக்கு தெரியும் என்பதால், எனக்கு இந்த மூன்று மொழிகளிலும் பாடல்களின் அசல் தன்மையை இழக்காமல் கொண்டுவந்தேன். மலையாளம் மற்றும் கன்னடத்திற்கு மட்டும் மொழிபெயர்ப்பாளர்களும், பாடலாசிரியர்களும் உதவினார்கள். ஒவ்வொரு வரியையும் சரிபார்த்து அதன் அழகை இழக்காமல் கொண்டுவந்தோம். இதற்கே, எனக்கு நீண்ட நேரம் ஆனது.

ஐந்து வெவ்வேறு படங்களில் வேலை செய்தது போல் இருந்தது. அந்தளவுக்கு உடல் உழைப்பைக் கொட்டினேன். இதுவும் ஒருவிதமான த்ரில்லிங் அனுபவம்தான். ஆனால், அனைத்து மொழிகளிலும் பாடல்கள் ஹிட் அடித்து பலன் கிடைத்துள்ளது. ’ஊ அன்டவா’ பாடல் சர்ச்சையானது குறித்து கவலை இல்லை. நாங்கள் எங்கள் வேலையைச் செய்துக்கொண்டே இருக்கிறோம். மக்கள் பெரும்பாலான விஷயங்களை சர்ச்சைக்குரியதாக மாற்றுகிறார்கள்” என்று கூறியுள்ளார். ‘ஊ அன்டவா’ பாடல் தமிழில் ‘ஊ சொல்றியா’ பாடலாக ஆண்ட்ரியா குரலில் வெளியானது குறிப்பிடத்தக்கது. 

GO TO TOP

© Copyright Puthiyathalaimurai 2022. All rights reserved

செய்தி மடலுக்கு பதிவு செய்க

Read Entire Article