கடல் கன்னியாக மிரட்டவுள்ள நடிகை ஆண்ட்ரியா : படக்குழு தகவல்

2 years ago 895

Andrea-Jeremiah-plays-a-mermaid-in-a-fantasy-film

பிரபல பாடகியும், நடிகையுமான ஆண்ட்ரியா, தற்போது ஒரு பேண்டஸி படத்தில் கடல் கன்னியாக நடித்து வருகிறார்.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஆண்ட்ரியா ஜெராமியா. வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிக்கும் ஆண்ட்ரியா, பின்னணி பாடகியாகயும் உள்ளார். சமீபத்தில் வெளியான ‘புஷ்பா’ திரைப்பாடத்தில், இவர் பாடிய ‘ஓ சொல்றியா மாமா’ பாடல் பட்டிதொட்டியெங்கும் வைரலானது.

இந்நிலையில், வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிக்கும் நடிகை ஆண்ட்ரியா, தற்போது ஒரு பேண்டஸி படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். ‘துப்பாக்கி முனை’ படத்தின் இயக்குநர் தினேஷ் செல்வராஜ் இயக்கும் இப்படத்தில், நடிகை ஆண்ட்ரியா கடல் கன்னியாக நடித்து வருகிறார். நடிகை ஆண்ட்ரியா, கடந்த சில மாதங்களுக்கு முன்னர், கடல் கன்னி கெட் அப்பில் போட்டோஷூட் நடத்தி இருந்தார். அதைப்பார்த்து அவரை இப்படத்தில் நடிக்க படக்குழு ஒப்பந்தம் செய்துள்ளனர்.

ஆண்ட்ரியா சிறந்த நடிப்புத் திறமையை வெளிப்படுத்துபவராகவும், உயராக இருப்பதுடன், வசீகர தோற்றம் கொண்டவராக இருப்பதால், இந்த கதாபாத்திரத்திற்கு ஏற்றதாக இருக்கும் என்பதால், படக்குழு அவரை கடல்கன்னியாக நடிக்க தேர்ந்தெடுத்ததாகக் கூறியுள்ளது. ஆண்ட்ரியா நடிக்கும் இந்தப் படம், இந்தியாவில் எடுக்கப்படும் முதல் கடல்கன்னி திரைப்படம் என்று கூறப்படுகிறது.

image

மேலும், சுனைனா, முனீஸ்காந்த் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். படத்திற்கு இன்னும் பெயரிடப்படாதநிலையில், ஆண்ட்ரியா நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு, தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. இதற்காக தி.நகரில் 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பை படக்குழு நடத்தி வருகின்றது.

தூத்துக்குடி அருகே, மணப்பாடு என்றப் பகுதியிலும் படப்பிடிப்பை நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. அடுத்தமாதம் ஷூட்டிங்கை முழுவதுமாக முடித்து, படத்தை கோடை விடுமுறைக்கு திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டுள்ளது. இப்படத்திற்கு பிரபல ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்து வருகிறார். அனிமேஷன் வேலைகள் அதிகம் கொண்ட படம் என்பதால், தற்போதே அனிமேஷன் வேலைகளையும் படக்குழு தொடங்கியுள்ளது. நடிகை ஆண்ட்ரியா, தற்போது மிஷ்கினின் பிசாசு 2 படத்தில் நடித்து முடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article