குடும்பத்துடன் மாலத்தீவு சென்ற அல்லு அர்ஜூன்
13 அக், 2021 - 19:03 IST
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடித்து வரும் படம் புஷ்பா. ராஷ்மிகா மந்தனா, பகத்பாசில் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் இப்படம் இரண்டு பாகங்களாக வெளியாக உள்ளது. முதல் பாகம் வருகிற டிசம்பர் 17-ந்தேதி வெளியாக உள்ளது. படப்பிடிப்புக்கு நடுவே எப்போது ஓய்வு கிடைத்தாலும் குடும்பத்துடன் சுற்றுலா செல்வதை வழக்கமாக வைத்துள்ள அல்லு அர்ஜூன், தற்போது தனது மனைவி, மகன், மகளுடன் மாலத்தீவிற்கு சென்றுள்ளார். அந்தவகையில் இந்த ஆண்டு மட்டும் தனது குடும்பத்துடன் மூன்று முறை சுற்றுலா சென்ற அல்லு அர்ஜூன் தற்போது புஷ்பா படப்பிடிப்பு நிறைவடையும் தருவாயில் நான்காவது முறையாக மாலத்தீவுக்கு சென்று ரிலாக்ஸ் செய்து வருகிறார். இதையடுத்து ஐதராபாத் திரும்பியதும் புஷ்பா படத்தின் மீதமுள்ள மூன்று பாடல் காட்சிகளிலும் நடிக்கப்போகிறார்.
Advertisement
வரவிருக்கும் படங்கள் !
- ராஜவம்சம்
- நடிகர் : சசிகுமார்
- நடிகை : நிக்கி கல்ராணி
- இயக்குனர் :கதிர்வேலு
- வெள்ளை யானை
- நடிகர் : சமுத்திரக்கனி
- நடிகை : ஆத்மியா
- இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
- மாயன்
- நடிகர் : வினோத் மோகன்
- நடிகை : பிந்து மாதவி
- இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
- பிழை
- இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா