கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு 3.5 மடங்கு ஆபத்து அதிகம் - பொது சுகாதாரத்துறை

3 years ago 1124

Public-Health-Department-warns--Those-who-do-not-get-the-corona-vaccine-are-3-5-times-more-at-risk

கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத நபர்களுக்கு 3.5 மடங்கு ஆபத்து அதிகம் உள்ளது. இதனால் காலதாமதப்படுத்தாமல் மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என பொது சுகாதாரத்துறை வேண்டுகோள் விடுத்திருக்கிறது.

2021 ஆகஸ்ட், செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் மொத்தம் 2,011 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். அதில் 1,675 பேர் அதாவது 84% பேர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களே உயிரிழந்துள்ளனர். தொழில் நுட்பரீதியாக இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் ஒரு குறிப்பிட்ட நோயால் உயிரிழப்பு குறித்து கணக்கிடப்படுகிறது. அதில், தமிழகத்தில் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுடன் ஒப்பிடும்போது, கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்களே அதிகம் இறந்துள்ளனர்.

image

இதுகுறித்து பொதுசுகாதாரத்துறை, கொரோனா தடுப்பூசி செலுத்தாமல் கொரோனா தொற்று உறுதி செய்யப்படுபவர்களுக்கு 3.5 மடங்கு ஆபத்து அதிகம் உள்ளது. இதனால் பொதுமக்கள் அபாயத்தை உணர்ந்து விரைவில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். தமிழகத்தில் அனைவருக்கும் போடுவதற்கான தேவையான தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளது. இதனால் காலதாமதப்படுத்தால் தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருக்கிறது. 

சூர்யாவை உதைத்தால் ரூ.1 லட்சம் பரிசு என அறிவித்த பாமக நிர்வாகி மீது வழக்குப்பதிவு

Read Entire Article