கொரோனா வைரஸ்,ஹெல்த்
Published : 17,Sep 2021 08:53 AM
கொரோனா பரவலை தடுக்க பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் திட்டம் இல்லை என்று ஐ.சி.எம்.ஆர். இயக்குநர் தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த இருக்கும் பேராயுதம் என்ற அடிப்படையில் நாடு முழுவதும் தடுப்பூசி பயன்பாடு குறித்த விழிப்புணர்வு அதிகப்படுத்தப்பட்ட வண்ணம் இருக்கிறது. தற்போதைக்கு இந்தியாவில் 6-க்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் இந்தியாவில் அங்கீகரிப்பட்டு விநியோகிக்கப்பட்டு வரும் நிலையில், அதன் தன்மைக்கு ஏற்ப ஒரு டோஸ், இரு டோஸ், மூன்று டோஸ் என போடப்படுகிறது. இந்த டோஸ்கள் மட்டுமன்றி, மேற்கொண்டு கூடுதலாக ஒரு டோஸ் போடலாமா என்பது பற்றி ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
தொடர்புடைய செய்தி: 'பூஸ்டர் டோஸ்' தடுப்பூசி தேவையா, இல்லையா? - WHO தலைமை விஞ்ஞானியின் பார்வை
பல நாடுகளும் பூஸ்டர் டோஸ் குறித்து ஆலோசித்தும் விவாதித்தும் வரும் நிலையில், “18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும், 2 டோஸ் தடுப்பூசி செலுத்துவதே தற்போதைய இலக்கு” என்றும், “பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் திட்டம் இல்லை” என ஐசிஎம்ஆர் இயக்குநர் பல்ராம் பார்கவா கூறியுள்ளார்.
GO TO TOP
© Copyright Puthiyathalaimurai 2021. All rights reserved