”கொரோனாவிலிருந்து மீண்டு வருவதாக நடிகை த்ரிஷா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.
கொரோனா பரவல் மூன்றாவது அலை வேகமாக பரவிவரும் நிலையில், நடிகை த்ரிஷாவும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து, தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன், பாதுகாப்பாக இருந்தபோதிலும் புத்தாண்டிற்கு முன்பாக எனக்கு கொரோனா உறுதியானது. உண்மையில் மோசமான ஒரு வாரமாக அது கடந்தது. இப்போது கொரோனாவிலிருந்து குணமடைந்து வரும் நான், ஓரளவு நன்றாக உணர்கிறேன். கொரோனா தடுப்பூசிக்கு என் மனமார்ந்த நன்றிகள். நீங்கள் அனைவரும்கூட கட்டாயம் தடுப்பூசி எடுத்துக்கொள்ளுங்கள் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். முகக்கவசத்தையும் மறக்க வேண்டாம்.
விரைவில் கொரோனா நெகட்டிவ் என்ற சந்தோஷ செய்தியுடன் வீடு திரும்புவேன் என்ற நம்பிக்கை உள்ளது. என் மீது அக்கறை கொண்ட அத்தனை நண்பர்களுக்கும் உறவுகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்” என்று தெரிவித்துள்ளார். த்ரிஷா நடிப்பில் வரும் ஏப்ரல் மாதம் ‘பொன்னியின் செல்வன்’ முதல் பாகம் வெளியாகவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.