சர்க்கரை vs வெல்லம்: ஆரோக்கியம் எதில் இருக்கிறது?

3 years ago 892

Sugar-vs-Jaggery---which-is-healthier-

பெரும்பாலும் உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் சர்க்கரை மற்றும் இனிப்பு சாப்பிடுவதை குறைத்துக்கொள்வர். மேலும் இனிப்புசுவைக்கு சர்க்கரைக்கு பதிலாக எதை சேர்க்கலாம் என்றும் யோசிப்பர். அப்படி யோசிப்பவர்கள் முதலில் நாடுவது வெல்லம்தான். சர்க்கரைக்கு சிறந்த மாற்றுப்பொருள் வெல்லம்தான் என்றாலும் அது உடல் எடை குறைப்புக்கு உதவுமா என்றால் அது கேள்விக்குறிதான். எடைகுறைப்புக்கு உடற்பயிற்சி சிறந்ததுதான் என்றாலும் தினமும் நான் எடுத்துக்கொள்ளும் உணவும் அதில் முக்கியப்பங்கு வகிக்கிறது. இதுகுறித்து ஊட்டச்சத்து நிபுணர் பூஜா மல்ஹோத்ரா விளக்குகிறார். அவர் ஒவ்வொரு இனிப்பு சுவையூட்டிகளின் கலோரி அளவுகளையும் விளக்கி இருக்கிறார்.

உதாரணமாக கேக்கை எடுத்துக்கொண்டால், சிலர், கோதுமை மாவில் வெல்லம் சேர்த்து வீட்டிலேயே செய்த கேக் என்பார்கள். ஆனால் இந்த கேக் உண்மையிலேயே ஆரோக்கியமானதுதானா? என்ற கேள்வியும் எழுப்புகிறார்.

image

100 கிராமுக்கு கலோரி அளவு

சர்க்கரை(வெள்ளை) - 400 கி.கலோரி

சர்க்கரை(ப்ரவுன்) - 380 கி.கலோரி

சர்க்கரை (டெமராரா) - 390 கி.கலோரி

சர்க்கரை (தேங்காய்) - 340 கி.கலோரி

சர்க்கரை(பனை) - 353 கி.கலோரி

வெல்லம் - 383 கி.கலோரி

தேன் - 319 கி.கலோரி

இந்த கலோரிகளின் அளவை பார்த்தப்பிறகும் சர்க்கரை சிறந்த மாற்றுப்பொருள் வெல்லம்தான் என்று பலருக்கும் தோன்றாது. ஆனால் இது உடலுக்கு தேவையான சில தாதுப்பொருட்களை உடலுக்கு வழங்குகிறது என்கிறார் பூஜா. எனவே இனிப்பு எப்படியும் இனிப்புதான். எனவே உடல் எடையை கட்டுக்குள் வைக்க நினைப்பவர்களும் ஆரோக்கியத்தை மேம்படுத்த நினைப்பவர்களும் இனிப்புகளை சற்று தள்ளிவைப்பதே நல்லது. இனிப்புகள் விழாக்காலங்களுக்குத்தான் என்று மனதில் பதியவைத்துக்கொண்டாலே தேவையற்ற கலோரிகள் உடலில் சேர்வதை குறைக்கலாம் என்கிறார் பூஜா.

Read Entire Article