சினிமா
Published : 13,Oct 2021 01:15 PM
அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா’ படத்தின் ’ஸ்ரீவள்ளி’ பாடல் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது.
’அலா வைகுந்தபுரம் லோ’ படத்தின் வெற்றிக்குப் பிறகு தெலுங்கின் முன்னணி நடிகர் அல்லு அர்ஜுன், பிரபல இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் ‘புஷ்பா’ படத்தில் நடித்து முடித்துள்ளார். செம்மரக்கட்டை கடத்தல் கதைக்களத்தைக் கொண்ட இப்படத்தில் கடத்தல்கார லாரி டிரைவர் புஷ்பராஜ் கதாபாத்திரத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கிறார். ராஷ்மிகா மந்தனா ஜோடியாக நடிக்க தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். வில்லனாக மலையாள நடிகர் ஃபகத் ஃபாசில் ’பன்வார் சிங் ஷெகாவத் ஐபிஎஸ்’ கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
சமீபத்தில், அல்லு அர்ஜுன், ஃபகத் ஃபாசில், ராஷ்மிகா மந்தனா கதாபாத்திர போஸ்டர்கள் வெளியானது. ராஷ்மிகா மந்தனா ஸ்ரீவள்ளி என்ற பழங்குடியினப் பெண்ணாக நடிக்கிறார். இந்த நிலையில், இன்று இப்படத்தின் இரண்டாம் பாடலான ‘ஸ்ரீவள்ளி’ பாடல் வெளியாகியுள்ளது. நடிகை ராஷ்மிகா மந்தனாவுக்கும் அல்லு அர்ஜுனுக்குமான காதல் பாடலான இப்படாலை சித் ஸ்ரீராம் பாடியிருக்கிறார். தெலுங்கு மொழி தெரியாவிட்டாலும் சித் ஸ்ரீராம் குரலில் பாடலை திரும்பத் திரும்ப கேட்டு ரசிக்க வைக்கிறது என ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
Related Tags : ஸ்ரீவள்ளி, அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, புஷ்பா, பாடல், srivalli, pushpa, allu arjun, song, rashmika mandanna,
GO TO TOP
© Copyright Puthiyathalaimurai 2021. All rights reserved